புடவையை தூக்கிவிட்டு அந்த இடத்தில ஷேவிங் மெஷின் வைத்துள்ள நடிகை - சர்ச்சை இயக்குனர் வெளியிட்ட புகைப்படம்..!
சர்ச்சைகளின் இயக்குனர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் நாட்டில் நடந்த சர்ச்சையான விஷயங்களை வைத்து படமெடுப்பார் அல்லது இவர் எடுக்கும் படங்கள் சர்ச்சையை உருவாக்கும். ஆக மொத்தத்தில் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத இயக்குனர்.
இந்த ஓடிடி காலத்தில் புதிய விஷயம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் இயக்கியுள்ள படங்களை தியேட்டர்களில் வெளியிடாமல் அவருடைய சொந்த இணையதளத்தில் நேரடியாக வெளியிட ஆரம்பித்துள்ளார்.
இந்த மாதம் 6-ம் தேதி 'கிளைமாக்ஸ்' என்ற படத்தை அப்படி வெளியிட்டார். அடுத்து 'நேக்ட் நங்கா நக்னம்' என்ற படத்தை வெளியிட உள்ளார். இப்படத்தின் இரண்டாவது டிரைலரை நேற்று வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து படத்தை பிரபலப்படுத்தவதற்காக இன்று டுவிட்டரில் படத்தின் நாயகியான "ஸ்வீட்டி" என்பவரின் மோசமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அவை படத்தில் இடம் பெறும் காட்சிகளின் புகைப்படங்களைப் போலத்தான் தெரிகிறது. இருந்தாலும் எந்தவிதமான தணிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாத சமூக வலைத்தளத்தில் இப்படியான மோசமான புகைப்படங்களை வெளியிடுவதைப் பற்றி அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களோ, அல்லது பெண்கள் அமைப்புகளோ யாருமே வர்மாவின் இப்படியான பதிவுகளுக்கு எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது.
வர்மாவிற்கு ஒரு மனநல மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக ரசிகர் ஒருவர் கமெண்ட்டில் தெரிவித்துள்ளார். ராம்கோபால் வர்மா போன்ற பிரபல இயக்குனர்கள், இப்படியான படங்களளை வெளியிடுவதை தணிக்கைத் துறை தாமாகவே முன்வந்து தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஒரு இளம் பெண் வாஷ்பேஷன் மீது பாவடையை தூக்கி விட்டு அமர்ந்திருப்பது போலவும் , அருகில் ஷேவிங் செய்யும் ரேசர், ஃபோம் ஆகியவை இருப்பது போலவும் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளார். அதே நேரம், ராம் கோபால் வர்மாவை விளாசும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
புடவையை தூக்கிவிட்டு அந்த இடத்தில ஷேவிங் மெஷின் வைத்துள்ள நடிகை - சர்ச்சை இயக்குனர் வெளியிட்ட புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
June 22, 2020
Rating:
