"ஒவ்வொரு முறை படுக்கையை பகிரும் போதும் நான் இதை செய்தேன்.." - வெளிப்படையாக கூறிய ஸ்ரீரெட்டி..!


தன்னை நடிகர்கள், இயக்குனர்கள் பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையில் என்னை பயன்படுத்தி கொண்டனர் என்று கூறி சர்ச்சையை கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
 
தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தார். 
 
இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். 
 
அந்த வரிசையில் குஷ்புவின் கணவரும் மற்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் சிக்கியுள்ளார். மேலும், நயன்தாரா, திரிஷா, சமந்தா என இவர்கள் எல்லாம் எப்படி முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும் என்றும், அவர்கள் படுக்கையை பகிர்ந்த ஆட்கள் பெயரை எழுதினால் ஒரு புத்தகமே போடலாம் என்றும் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய அவரிடம் ரசிகர்கள் பலர் இப்படி பல பேருடன் இருந்தேன் என்று சொல்கிறீர்களே உங்களுக்கு இன்னும் எய்ட்ஸ் நோய் தாக்க வில்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
 
மேலும், இத்தனை பேரிடம் இருந்துவிட்டு  இப்போது குறை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். நடிகையாக வேண்டும் என்பதற்காக அவர்கள் ஆசைக்கு இணங்குவதை ஒரு பகுதி நேர வேலையாக வைத்திருக்கிறீர்களா? என காரசாரமான கேள்விகளை எழுப்பினர். 
 
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீரெட்டி, என் மீதான உங்களின் அக்கறைக்கு நன்றி. காண்டம் பற்றி உங்களுக்கு தெரியாது என நினைக்கிறேன். அப்படியான தொடர்பில் எனக்கு நல்ல அறிவு இருக்கிறது. என்னை எப்படி பாதுகாப்பது என எனக்கு தெரியும். 
 
ஒவ்வொருடனும் முறையும் நான் காண்டம் பயன்படுத்தினேன். 4 மாதங்களுக்கு ஒருமுறை என் உடலை மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறேன். என்னுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் யோகா மூலம் உறுதியை பெறுகிறேன். 
 
இது போல கருத்து தெரிவித்து பாவத்தை பெறாதீர்கள். உங்களின் விமர்சனத்தை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மரணம் அடைய எய்ஸ்ட் தேவையில்லை, காய்ச்சலால் கூட நீங்கள் மரணமடையலாம் என அவர் பதிலளித்துள்ளார்.

"ஒவ்வொரு முறை படுக்கையை பகிரும் போதும் நான் இதை செய்தேன்.." - வெளிப்படையாக கூறிய ஸ்ரீரெட்டி..! "ஒவ்வொரு முறை படுக்கையை பகிரும் போதும் நான் இதை செய்தேன்.." - வெளிப்படையாக கூறிய ஸ்ரீரெட்டி..! Reviewed by Tamizhakam on November 09, 2020 Rating: 5
Powered by Blogger.