வணக்கம் வணக்கம் வணக்கம்...! அள்ள அள்ள பணம்..! என்ற தலைப்பில் பங்கு சந்தையில் பணம் அள்ளுவது எப்படி என இரண்டு பகுதிகளை நாம் பார்த்து விட்டோம். ஒரு வேளை, அவற்றை படிக்காமல் நேரடியாக இங்கே வந்திருந்தால் தயவு செய்து கீழே உள்ள லிங்க்குகளை பயன்படுத்தி அந்த இரண்டு பகுதிகளையும் படித்து விட்டு வாருங்கள். அப்போது தான் இந்த பகுதியை புரிந்து கொள்ள முடியும்.
1.பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 1
2.பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 2
1.பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 1
2.பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 2
சரி வாங்க, இன்றைய பகுதிக்குள் செல்லலாம். பங்கு சந்தை என்றால் என்ன? எப்படி, நொடிக்கு நொடி பங்கின் விலை ஏறி இயங்குகிறது..? அதற்கு, என்ன காரணம் என்பதை முந்தைய இரு பகுதிகளில் நாம் பார்த்து விட்டோம்.
இந்த பகுதியில் மார்கெட்டில் என்ன நடக்கின்றது..? எப்படி பங்குகளை வாங்கி விற்பது..? அதற்கான வழிகள் என்ன..? என்பதை பற்றி தெளிவாகவும் விரிவாகவும் பார்ப்போம்.
முதலில், மார்கெட்டில் என்ன நடக்கின்றது..? அதனை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதை பாப்போம். இந்தியாவில் மொத்தம் இரண்டு மார்க்கெட் உள்ளது. ஒன்று, BSE - பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் ( Bombay Stock Exchange ) .மற்றொன்று NSE - நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் ( National Stock Exchange )
இந்த இரண்டின் வேலையும் ஒன்றே தான். கடைபிடிக்கப்படும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மட்டும் சிறிதளவு வித்தியாசம் இருக்கின்றது.
BSE - இந்தியாவின் பழமையான ஸ்டாக் எக்சேஞ் ஆகும். இது 1957-ம் வருடம் நடைமுறைக்கு வந்தது. இதில், 5749 நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை பட்டியலிட்டு வைத்துள்ளனர். இதில், BSE-யானது டாப் 30 நிறுவனங்கள் என்ற பட்டியலை வைத்திருகின்றது. இந்த 30 ஸ்டாக்குகளின் ஏற்ற, இறக்கத்தை வைத்து தான் SENSEX புள்ளிகள் மதிப்பிடப்படுகின்றன.
இன்று SENSEX புள்ளிகள் உயர்வு, SENSEX வரலாறு காணாத வீழ்ச்சி போன்ற தகவல்கள் தொலைக்காட்சி சேனலை மாற்றும் போது உங்கள் காதில் விழுந்திருக்கும் அல்லது செய்திதாள்களை புரட்டும் போதும் உங்கள் பார்வையில் பட்டிருக்கும். அந்த சென்செக்ஸ் என்பது வேறு ஒன்றும் இல்லை. மும்பை பங்கு சந்தையில் டாப் 30 பட்டியலில் உள்ள நிறுவனங்களுடைய பங்குகளின் விலை ஏற்ற, இறக்கத்தை தான் மொத்தமாக SENSEX என்று அளவிடுகிறார்கள்.
SENSEX எப்படி உயருகிறது..? எப்படி இறங்குகிறது.? என முதலில் பார்த்து விடுவோம். இப்போது, BSE தன்னிடம் உள்ள 5749 நிறுவங்களில் இருந்து தேர்வு செய்து வைத்துள்ள டாப் 30 லிஸ்டில் உள்ள 30 நிறுவனங்களுடைய பங்குகளின் விலை ஏறுகின்றது என்றால் சென்செக்ஸ் புள்ளிகளும் ஏற்றம் காணும்.
ஒரு வேளை அந்த 30 நிறுவனங்களுடைய பங்குகளின் விலை குறைந்தால் சென்செக்ஸ் புள்ளிகளும் இறக்கம் காணும். அல்லது, 20 நிறுவனங்களின் பங்குகள் உயருகிறது. 10 நிறுவங்களின் பங்கு குறைகின்றது என்றால் அப்போதும் சென்செக்ஸ் உயரும். ஏனென்றால், உயருவதற்கு 20 நிறுவனங்கள் துணை நிற்கின்றன. ஆனால், குறைவதற்கு 10 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதே போல, 10 நிறுவனங்களின் பங்குகள் உயருகின்றது. 20 நிறுவனங்களின் பங்கு சரிகின்றது என்றால் SENSEX புள்ளிகளும் சரியும். காரணம், ஏறுவதற்கு 10 நிறுவனங்கள் துணை நின்றாலும், கீழே இழுப்பதற்கு 20 நிறுவனங்கள் உள்ளன. இப்போது, உங்களுக்கு SENSEX பற்றிய ஒரு ஐடியா கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.
அடுத்த படியாக, NSE - நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச். இது, இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த மார்க்கெட் என்று கூறலாம். காரணம், இதில் நிறுவனங்களுக்கு கெடுபிடி அதிகம், முதலீட்டாளர்களை பாதுகாக்கும் விதிமுறைகளும் அதிகம். அதனால், இதில் ஒரு நிறுவனம் தன்னுடைய ஸ்டாக்-கை லிஸ்ட் செய்வது மிகவும் கடினமான விஷயம். அதனால், வெறும் 1696 நிறுவனங்கள் மட்டுமே NSE-யால் பட்டியலிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட BSEயில் லிஸ்ட் ஆகியுள்ள நிறுவனங்களில் 5-க்கு ஒன்று தான் NSE-யில் உள்ளே வர முடிந்திருகின்றது.
அதனால், மார்க்கெட்டில் நுழைந்த பின்பு NSE-யில் லிஸ்ட் ஆகியுள்ள நிறுவங்களின் பங்குகளில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஒரு வேளை, BSE-யில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்குகிறீர்கள் என்றால் அதே நிறுவனம் NSE-யிலும் லிஸ்ட் ஆகியிருக்கிறதா..? என்பதை ஒருமுறை சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.
சரி, NIFTY புள்ளிகள் உயர்வு, NIFTY புள்ளிகள் வீழ்ச்சி என்கிறார்களே..! NIFTY என்றால் என்ன..? வேறு ஒன்றும் இல்லை. எப்படி BSE-க்கு SENSEX இருக்கின்றதோ, அதே போல NSE-க்கு NIFTY.
NSE மார்கெட் தன்னிடம் லிஸ்ட் ஆகியுள்ள நிறுவனங்களில் டாப் 50 நிறுவனங்களை தேர்வு செய்து NIFTY 50 ( NIFTY FIFTY ) என்ற ஒரு பட்டியலை வைத்துள்ளது. இந்த NIFTY 50-யில் உள்ள நிறுவனங்களின் விலை ஏற்றம், இறக்கத்தை அடிப்படையாக வைத்து NIFTYயின் புள்ளிகள் உயருவதும் இறங்குவதும் கணக்கிடப்படும். மேலே, BSE SENSEX புள்ளிகள் எப்படி கணக்கிடப்படுகின்றது என்று பார்த்தோம் அல்லவா..? அப்படியேதான் NIFTY புள்ளிகளும் கணக்கிடப்படுகின்றன.
இது தாங்க, NSE, BSE, SENSEX, NIFTY எல்லாமே..! இப்போதைக்கு இது போதும் தொடர்ந்து வரும் பகுதிகளில் மார்கெட் பற்றிய சிறு சிறு விஷயங்களை போக போக தெரிந்துகொள்ளலாம். அடுத்து, எப்படி மார்க்கெட்டுக்குள் நுழைந்து பங்குகளை வாங்குவது என்பது பற்றி பார்ப்போம்.
NSE மற்றும் BSE தான் பங்குகளை நிர்வாகிக்கின்றன. ஆனால், அவற்றை நம்மால் நேரடியாக NSE அல்லது BSE-யிடமிருந்து வாங்க முடியாது. ஆம், நம்மால் நேரடியாக பங்குகளை வாங்கவோ, அல்லது விற்கவே முடியாது.
உதாரணத்திற்கு, ஒரு கிலோ பருப்பு நீங்கள் வாங்குகிறீர்கள். அதற்காக, பருப்பு விளைவிக்கும் விவாசாயி'யிடம் சென்றா வாங்குவீர்கள்..? அல்லது, ஹோல் சேல் டீலரிடமிருந்து வாங்குவீர்களா..? முடியாது அல்லவா..? ஒரு கிலோ பருப்பு வேண்டும் என்றால் ஒரு மளிகை கடையில் தான் வாங்க வேண்டும்.
இங்கே, நமக்கும் ஹோல்சேல் டீலருக்கும் இடையில் மளிகை கடைக்காரர் என்று ஒருவர் இடைத்தரகராக செயல்படுகிறார் அல்லவா..? அதே போல தான் பங்கு சந்தையிலும், நாம் மார்கெட்டில் பங்குகளை வாங்கவோ, விற்கவே வேண்டுமென்றால் நமக்கு ஒரு இடைத்தரகர் (Broker) ஒருவர் வேண்டும்.
சரி, யார் இந்த Broker..? இவர்களை நான் எங்கே போய் தேடுவது..? என்ற கேள்வி எழுகிறதா..? எங்கும் அலய வேண்டாம். ஆன்லைனிலேயே 100-க்கும் மேற்பட்ட ப்ரோக்கர்கள் இருக்கிறார்கள். இவற்றை, பொதுவாக Brokerage Companies என்று சொல்வார்கள்.
இந்த ப்ரோகரேஜ் கம்பெனிகளில் ஏதாவது ஒரு கம்பெனியில் நீங்கள் கணக்கை தொடங்கி அதன் மூலம் பங்குகளை வாங்கி விற்கலாம்.
பங்குகளை வாங்கி, விற்பதை ட்ரேடிங் (Trading) என்று அழைக்கிறார்கள். இனி வரும் பகுதிகளில் ட்ரேடிங் அல்லது ட்ரேடு என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவோம்.
நீங்கள், ட்ரேடிங்கை தொடங்குவதற்கு முன்பு ஒரு பரோக்கரேஜ் நிறுவனத்தில் உங்களை பதிவு செய்து கொண்டு கணக்கை துவங்கி கொள்ள வேண்டும். இதனை டீமேட் கணக்கு ( Demat Account ) என்று கூறுவார்கள்.. அதற்க்கான வழிகள் மிகவும் எளிமையானது. எது சிறந்த Brokerage Company என்று கூகுளில் தேடினால் உங்களுக்கு பல நிறுவனங்கள் மற்றும் அதற்க்கான கட்டண விபரங்கள், அவற்றின் ரேட்டிங் என பல விஷயங்கள் வரும்.
அவற்றை பயன்படுத்தி நல்ல ப்ரோக்கரேஜ் கம்பெனியை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். என்னிடம் கேட்டால், IIFL மற்றும் Zerodha ஆகிய இரண்டு ப்ரோக்கர்களிடம் கணக்கை தொடங்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.
சரி டீமேட் கணக்கு என்றால் என்ன..? வங்கிக்கணக்கிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்..? என்று பார்த்துவிடுவோம்.
வங்கிகணக்கில் பணத்தை போட்டு வைக்கலாம். பணத்தை எடுக்கலாம். பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றி விடலாம்.ஆனால், டீமேட்கணக்கில் நீங்கள் உங்கள் பணத்தை போட்டுவைக்கலாம். அந்த பணத்தை வைத்து பங்கு சந்தையில் உள்ள பங்குகளை வாங்கலாம். வங்கப்பட்ட பங்குகள் உங்களுடைய டீமேட் கணக்கில் இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும், அந்த பங்குகளை விற்று பணமாக மாற்றிக்கொள்ளலாம். அந்த பணம் மீண்டும் உங்கள் டீமேட் கணக்கிற்கு வந்துவிடும்.
ஆனால், டீமேட் கணக்கிலிருந்து நாம் நினைத்த நேரத்திற்கு பணத்தை எடுக்கவோ, அதனை வேறு எதிலாவது செலவு செய்யவோ முடியாது. அதற்கு, நீங்கள் முதலில் டீமேட் கணக்கில் இருந்து உங்களுடைய வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றுங்கள் என உங்களது ப்ரோக்கருக்கு Withdrawal Request கொடுக்கவேண்டும். அதன் பிறகு, ஒன்று அல்லது இரண்டு வேலை நாட்களில் உங்களது வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேரும். அதன் பிறகு நீங்கள் அதனை எடுத்துக்கொள்ளலாம்.
சரி, பங்குசந்தையில் ட்ரேடு (Trade) செய்ய குறைந்தபட்சம் நான் எவ்வளவு பணம் போட வேண்டும் என்று கேட்கிறீர்களா..? - அது உங்கள் விருப்பம் தான். குறைந்த பட்சம் 1 ரூபாயில் இருந்து கூட உங்களால் பங்கு சந்தையில் ட்ரேடு செய்ய முடியும். ஆனால், 1 ரூபாய் மதிப்பில் உள்ள பங்குகளில் ஒரே ஒரு பங்கை தான் உங்களால் வாங்க முடியும்.
இவ்வளவு பணம் இருந்தால் தான் மார்க்கெட்டுக்குள் வரவேண்டும் என்ற விதி எதுவும் கிடையாது. பல சிறிய நிறுவனங்களின் பங்குகள் 50 பைசா முதல் 5 ரூபாய் வரை கூட இருக்கின்றன. ஆனால், அவற்றால் நமக்கு பெரிய அளவில் லாபம் எதுவும் தந்து விட முடியாது.
இப்போது, ஒரு 5000 ரூபாய் முதலீட்டுடன் நீங்கள் உள்ளே நுழைந்தால் தான் உங்களுக்கு சொல்லிகொள்ளும் படி லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு, 250 ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்கினை நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, உங்களிடம் உள்ள பணத்தை வைத்து 20 பங்குகளை உங்களால் வாங்க முடியும். அந்த பங்கின் விலை 255 என்ற ஏறிய போது விற்றுவிட்டால் ஒரு பங்கிற்கு ரூபாய் 5 வீதம் மொத்தம் இருபது பங்குகளுக்கும் சேர்த்து 100 ரூபாய் லாபம் கிடைக்கும்.
இந்த 100 ரூபாய் லாபம் மொத்தமும் எனக்கு கிடைத்து விடுமா..? என்றால். இல்லை என்பது தான் விடை. உடனே பயந்து விடாதீர்கள். Brokerage , STT , Exchange txn charge, Clearing charge, GST, SEBI charges, Stamp Duty என உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும். இதனை, பொதுவாக ப்ரோக்கரேஜ் சார்ஜஸ் என்று அழைப்பார்கள்.
அதாவது, நீங்கள் பங்குகளை வாங்கிய தொகை 5000 ரூபாய் + விற்ற தொகை 5100 என மொத்தம் 10,100 ரூபாய். 10,000 ரூபாய் பரிமாற்றத்திற்கு தோரயமாக 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை நீங்கள் மேலே சொன்ன கட்டணங்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும். ஆக, 100 ரூபாய் லாபம் பார்த்தால் அதில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை பரிமாற்ற கட்டணங்கள் ( Exchange Fee) சென்றுவிடும். 88 முதல் 90 ரூபாய் உங்களின் நிகர லாபம்.
அதே சமயம், 200 ரூபாய் லாபம் பார்த்தாலும் இந்த 10 அல்லது 12 ரூபாயே தான் கட்ட வேண்டிவரும். காரணம், வாங்கிய தொகை 5000 + விற்ற தொகை 5200 என மொத்தம் 10200. இங்கே, 10,100-க்கும் 10,200-க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எனவே அதே தொகை தொகைதான் ப்ரோக்கரேஜ் கட்டணமாக கட்ட வேண்டி வரும் அல்லது ஓரிரு பைசாக்கள் அதிகமாக வரும். அவ்வளவு தான்.
அதாவது, நீங்கள் பங்குகளை வாங்கிய தொகை 5000 ரூபாய் + விற்ற தொகை 5100 என மொத்தம் 10,100 ரூபாய். 10,000 ரூபாய் பரிமாற்றத்திற்கு தோரயமாக 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை நீங்கள் மேலே சொன்ன கட்டணங்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும். ஆக, 100 ரூபாய் லாபம் பார்த்தால் அதில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை பரிமாற்ற கட்டணங்கள் ( Exchange Fee) சென்றுவிடும். 88 முதல் 90 ரூபாய் உங்களின் நிகர லாபம்.
அதே சமயம், 200 ரூபாய் லாபம் பார்த்தாலும் இந்த 10 அல்லது 12 ரூபாயே தான் கட்ட வேண்டிவரும். காரணம், வாங்கிய தொகை 5000 + விற்ற தொகை 5200 என மொத்தம் 10200. இங்கே, 10,100-க்கும் 10,200-க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எனவே அதே தொகை தொகைதான் ப்ரோக்கரேஜ் கட்டணமாக கட்ட வேண்டி வரும் அல்லது ஓரிரு பைசாக்கள் அதிகமாக வரும். அவ்வளவு தான்.
இந்த விஷயங்கள் எல்லாம் மார்கெட்டிற்குள் நீங்கள் நுழைந்து சிறிய தொகையில் குறைவான பங்குகளை வாங்கி ட்ரேடு செய்தாலே தெளிவாக தெரியவரும்.அதைப்பற்றி பெரிதாக ஒன்றும் கவலைப்படதேவையில்லை.
அடுத்த பகுதியில், மார்க்கெட்டில் என்னென்ன முறைகளில் ட்ரேடிங் செய்யலாம்..? அதன் வகைகள் என்ன..? எது பாதுக்காப்பானது..? எதில் நல்ல லாபம் பார்க்கலாம்.? எங்கெல்லாம் நஷ்டம் வர வாய்ப்புள்ளது..? பேப்பர் ட்ரேடிங் என்றால் என்ன..? போன்றவற்றிற்கு பதிலை தெரிந்துகொள்ளலாம்.
உங்களது சந்தேகங்களை நம்முடைய முகநூல் பக்கங்களில் கேட்கலாம் நண்பர்களே. உங்களுக்கு பதிலிக்க நான் காத்திருக்கிறேன்.
தொடர்ந்து வரும், பதிவுகளை தவற விடமால் பார்க்க இந்த ( https://www.facebook.com/tamizhakamsmt/ ) முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். அல்லது, (https://t.me/tamizhakamsmt) என்ற Telegram Channel-ல் இணைந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பதிவுகளின் லிங்குகளை நான் அவற்றில் உங்களுக்கு பகிர்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.
உங்களிடம் டெலிகிராம் ஆப் இல்லையென்றால் தயவு செய்து இன்ஸ்டால் செய்து நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதில், அனைத்து பதிவுகளின் லிங்குகள். அவ்வபோது செய்யப்படும் அப்டேட்டுகள் உங்களுக்கு தவறாமல் கிடைக்கும்.
நன்றி, வணக்கம்.
அடுத்த பகுதியில், மார்க்கெட்டில் என்னென்ன முறைகளில் ட்ரேடிங் செய்யலாம்..? அதன் வகைகள் என்ன..? எது பாதுக்காப்பானது..? எதில் நல்ல லாபம் பார்க்கலாம்.? எங்கெல்லாம் நஷ்டம் வர வாய்ப்புள்ளது..? பேப்பர் ட்ரேடிங் என்றால் என்ன..? போன்றவற்றிற்கு பதிலை தெரிந்துகொள்ளலாம்.
உங்களது சந்தேகங்களை நம்முடைய முகநூல் பக்கங்களில் கேட்கலாம் நண்பர்களே. உங்களுக்கு பதிலிக்க நான் காத்திருக்கிறேன்.
தொடர்ந்து வரும், பதிவுகளை தவற விடமால் பார்க்க இந்த ( https://www.facebook.com/tamizhakamsmt/ ) முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். அல்லது, (https://t.me/tamizhakamsmt) என்ற Telegram Channel-ல் இணைந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பதிவுகளின் லிங்குகளை நான் அவற்றில் உங்களுக்கு பகிர்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.
உங்களிடம் டெலிகிராம் ஆப் இல்லையென்றால் தயவு செய்து இன்ஸ்டால் செய்து நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதில், அனைத்து பதிவுகளின் லிங்குகள். அவ்வபோது செய்யப்படும் அப்டேட்டுகள் உங்களுக்கு தவறாமல் கிடைக்கும்.
நன்றி, வணக்கம்.






