சென்னை, ஏப்ரல் 25 : 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது குறித்து பிரபல ஜோதிடர் ஜோதிடர் திலகம் குருவருள் வெங்கடரமண சுவாமிகள் எளிய ஜாதக அமைப்பின் அடிப்படையில் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய் ஆகிய மூவரின் ராசியை மட்டும் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிடர் வெங்கடரமண சுவாமிகள் தனது கணிப்பில் கூறியிருப்பதாவது:
“முதலமைச்சர் பதவிக்கு வாய்ப்புள்ள மூன்று பேரும் – மு.க.ஸ்டாலின் (சிம்ம ராசி), எடப்பாடி பழனிசாமி (கன்னி ராசி), நடிகர் விஜய் (கடக ராசி) – ஆகியோரின் ராசியை மட்டுமே பார்த்தால் போதும்.
12-ம் வீடு விரயத்தையும், 11-ம் வீடு லாபத்தையும் தரும் என்ற அடிப்படை விதியைப் பயன்படுத்தினால் போதும்.
- எடப்பாடி பழனிசாமியின் கன்னி ராசிக்கு மு.க.ஸ்டாலினின் சிம்ம ராசி 12-ம் வீடு (விரயம்) ஆகவும், நடிகர் விஜயின் கடக ராசி 11-ம் வீடு (லாபம்) ஆகவும் அமைகிறது.
- மு.க.ஸ்டாலினின் சிம்ம ராசிக்கு விஜயின் கடக ராசி 12-ம் வீடு (விரயம்) ஆக அமைகிறது.
மேலும், சிம்ம ராசியும் கடக ராசியும் தற்போது கால சர்ப்ப தோஷத்தில் சிக்கியுள்ளன. இதனால் இந்த இரு ராசிக்காரர்களும் ஆட்சிக்கு வருவது மிகவும் கடினம். கால சர்ப்ப தோஷத்திற்கு அப்பாற்பட்ட கன்னி ராசி கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்சி அமையும் வாய்ப்பு உள்ளது.
எனினும் அமோகமான பெரும்பான்மை கிடைக்காது. கூட்டணி ஆட்சிதான் அமையும். அந்தக் கூட்டணியில் நடிகர் விஜயின் கட்சியும் இடம் பெறும் வாய்ப்பு தெளிவாகத் தெரிகிறது.
விஜயின் கடக ராசிக்கு கன்னி ராசி 3-ம் வீடு (சகோதரஸ்தானம்) என்பதால், தேர்தல் முடிவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும் நடிகர் விஜயும் அண்ணன்-தம்பி போல ஒற்றுமையுடன் அரசியலை முன்னெடுப்பார்கள்” என்று ஜோதிடர் வெங்கடரமண சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இந்த கணிப்பு சரியா? தவறா? என்பது மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரபல ஜோதிடரின் இந்த ராசி அடிப்படையிலான கணிப்பு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : Astrologer Guruvurual Venkataramana Swamigal has predicted that Edappadi Palaniswami is likely to form the next government in the 2026 Tamil Nadu assembly elections through a coalition. Actor Vijay’s party may join the alliance. MK Stalin and Vijay face difficulties due to Kaal Sarpa Dosha while Palaniswami’s Virgo sign remains favourable.
