வணக்கம் வணக்கம் வணக்கம்...! அள்ள அள்ள பணம்..! என்ற தலைப்பில் பங்கு
சந்தையில் பணம் அள்ளுவது எப்படி என மூன்று பகுதிகளை நாம் பார்த்து
விட்டோம். ஒரு வேளை, அவற்றை படிக்காமல் நேரடியாக இங்கே வந்திருந்தால் தயவு
செய்து கீழே உள்ள லிங்க்குகளை பயன்படுத்தி அந்த இரண்டு பகுதிகளையும்
படித்து விட்டு வாருங்கள். அப்போது தான் இந்த பகுதியை புரிந்து கொள்ள
முடியும்.
1.பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 1
2.பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 2
2.பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 2
கடந்த பகுதியில், ஸ்டாக் மார்கெட்டில் என்ன நடக்கிறது..? NSE என்றால் என்ன..? BSE என்றால் என்ன..? NIFTY மற்றும் SENSEX என்றால் என்ன போன்றவற்றையும், பங்குகளை எப்படி வாங்கி, விற்பது போன்ற விபரங்களை பார்த்தோம்.
இப்போது, மார்கெட்டில் என்னென்ன வகையில் பங்குகளை வாங்கி விற்கலாம் என்று பாப்போம். அதற்க்கு முன்பாக, முகநூளில் நம்முடைய நண்பர் ஒருவர் " Demat Account இல் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யாமல் வைத்திருக்க முடியுமா? அப்படி விற்பனை செய்யாமல் வைத்திருந்தால் என்ன நன்மைகள்? " என்ற கேள்வியை கேட்டிருந்தார்.
அதற்க்கான பதிலை இப்போது பார்த்து விடுவோம். நீங்கள் வாங்கும் பங்குகளை உங்கள் Demat Account-ல் எத்தனை வருடங்கள் வரை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். இதனை, LONG TERM INVESTING என்று அழைப்பார்கள். இதில் உள்ள நன்மை என்னெவென்றால், அதிக காலத்திற்கு ஒரு பங்கை நீங்கள் HOLD செய்வதன் மூலம், அதிகப்படியான சதவீதம் லாபம் கிடைக்கும்.
உதாரணமாக, 2009 BAJAJ FINSERV நிறுவனத்தினுடைய ஒரு பங்கின் விலை வெறும் 100 ரூபாய். ஆனால், இப்போது, 2019-ல் 7500 ரூபாய். யோசித்து பாருங்கள், 2009-ல் 100 ரூபாய் விலையில் 100 பங்குகளை 10,000 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கியிருந்தால் 7500 X 100 ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக மாறியிருக்கும். ஒரு வேளை, 10,000 ரூபாய் பணத்தை வங்கியில் Fixed Deposit போட்டு வைத்திருந்தால் 17,500 ரூபாயாகத்தான் மாறியிருக்கும். இது தான் LONG TERM INVESTMENT-ன் நன்மை.
உடனே சந்தோஷப்படாதிங்க பாஸ்..! - நான் அடுத்த கணக்கிற்கு வரேன். 2008-ஆம் ஆண்டு RCOM (Reliance Communications Limited) நிறுவனத்தினுடைய ஒரு பங்கின் விலை 800 ரூபாய். ஆனால், இப்போது, வெறும் 2 ரூபாய் தான். யோசித்து பாருங்கள். இந்த RCOM நிறுவனத்தில் ஒரு 100 பங்குகளை வாங்கி பத்து வருஷத்துக்கு விற்காமல் வைத்திருக்கிறேன் என்று நீங்கள் நினைத்திருந்தால் 80,000 ரூபாய் என்பது 2019-ல் வெறும் 200 ரூபாய் ஆகி உங்களை போண்டியாக்கியிருக்கும். இந்த 80,000 ரூபாயை வங்கியில் போட்டு வைத்திருந்தால் பத்து வருடத்தில் இரட்டிப்பாகி 1 லட்சத்து 50 ஆயிரத்து சொச்சம் என இருந்திருக்கும். இப்போது, புரிகிறதா..? LONG TERM INVESTING-ல் உள்ள ரிஸ்க்கு...! ஷேர் மார்கெட் என்றாலே ரிஸ்க்கான விஷயம் தான். ஆனால்,எங்கே புகுந்து எங்கே வெளியே வர வேண்டும் என்ற நெளிவு சுழிவுகளை கற்றுக்கொண்டு லாபம் பார்ப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தான், மார்கெட் பக்கமே வரவேண்டும். அரைகுறையாக கற்றுக்கொண்டு பங்குசந்தைக்குள் பணத்தை தூக்கி கொண்டு வந்தால் பங்கு சந்தை உங்களை பங்கு பங்காக பிரித்து ரத்த அடிகொடுத்து வெளியே தூக்கி போட்டுவிடும்.
பங்குசந்தைக்கு ஈவு, இரக்கம், தயவு தாட்சனை என்றால் என்னவென்றே தெரியாது. சிக்குனா சின்னா பின்னமாகிடுவீங்க பாஸ். ஒரு படத்தில், நடிகர் வடிவேலு, "சார், சினங்கொண்ட சிங்கத்த சிறையில அடச்சீங்கனா.., அது செல்-லயே செதச்சுரும் பரவாலையா..?" என்று நகைச்சுவையாக சொல்வார்.
ஆனால், மார்க்கெட் இதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்காது.. வச்சு செஞ்சுட்டு அதனுடைய பாதையில் போய்க்கொண்டே இருக்கும்.
அதனால், மார்க்கெட்டில் பணத்தை போடாமல் பேப்பர் ட்ரேடு மட்டும் செய்து மார்க்கெட் பற்றிய அறிவை பெறுங்கள். Paper Trade என்றால் என்ன..? அதனை எப்படி செய்வது.? என்ற விபரத்தை இந்த பகுதியின் இறுதியில் கொடுத்து விடுகிறேன்.
சரி வாங்க,ஷேர் மார்க்கெட்டில் எந்தெந்த வகையில் நாம் பங்குகளை வாங்கி விற்கலாம் என பார்ப்போம்.
Equity Stocks
Foreign Exchange Forex
Physical Assets
Derivatives
என்னடா இது ஒண்ணுமே புரியல, ஈக்விட்டு, ஃபாரக்ஸ், ஃபிசிகல் அஸ்ஸட்ஸ், டெரிவேடிவ்ஸ் அது இது-ன்னு...என்று குழம்பாதீர்கள். இவையெல்லாம், ஒவ்வொரு வகைதானே தவிர, எல்லாவற்றிலும் எங்கே, எப்போது, என்ன விலையில் வாங்கு வேண்டும். எங்கே, எப்போது என்ன விலையில் விற்க வேண்டும் என்பது தான் அடிப்படை.
இவற்றை பற்றி ஆழமாக பார்த்தல் உங்களை குழப்பி விட்டுவிடும். அதே சமயம் பதிவும் நீளமாக போகும். அதனால் ரத்தின சுருக்கமாக இவற்றை பற்றி நாம் பார்த்து விடுவோம்.
Equity Stocks என்றால் என்ன..?
பங்குசந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கினை நாம் எந்த எண்ணிக்கையில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம். குறைந்த பட்சம் 1 பங்கினை கூட இதில் உங்களால் வாங்க முடியும். எத்தனை நாட்கள், மாதங்கள்,ஆண்டுகள் வேண்டுமானாலும் அதனை நீங்கள் உங்கள் டீமேட் கணக்கில் வைத்திருக்கலாம். இது தான் ஈக்விட்டி ஸ்டாக்.
Foreign Exchange (Forex) என்றால் என்ன?
ஏதாவது, இரண்டு நாடுகளின் கரன்சி மதிப்பிற்கு வர்த்தகம் செய்வது. எடுத்துக்காட்டாக, USD to INR என்று வைத்துக்கொள்ளுங்கள். டாலரின் விலை 65 ரூபாயில் இருக்கும் போது வாங்கி அது 66 ரூபாய் அல்லது அதற்கும் கூடுதலான விலை வந்தவுடன் விற்றுவிடுவது. அவ்வளவு தான். இதை பற்றி இப்போது நாம் பெரிதா விவாதிக்க தேவையில்லை. பிறகு, தனியாக ஒரு பதிவில் தெளிவாக பார்ப்போம்.
Physical Assets என்றால் என்ன..?
தங்கம், வெள்ளி, துத்தநாகம், வைரம், கிராஃபைட், எண்ணெய் போன்ற பொருட்களை வாங்கி அவை விலை எரிய பின்பு விற்றுவிடுவது தான். உதாரணமாக, நீங்கள் ஒரு கிலோ தங்கத்தை வாங்க வேண்டும் என்றால் நகைகடைக்கு சென்றுதான் வாங்க வேண்டும் என்றில்லை. ஷேர் மார்க்கெட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். திருடுபோகும் ஆபாயம் இல்லை. நீங்கள் அதனை பாதுக்காக்கவும் தேவையில்லை. உங்களிடம் ஒரு கிலோ தங்கம் இருக்கிறது என்ற வரவு உங்கள் டீமேட் கணக்கில் வைக்கப்படும்.நீங்கள் வாங்கிய விலையை விட அதிக விலை வரும் போது விற்றுவிடலாம்.
Derivatives என்றால் என்ன..?
இது மிகவும் சிக்கலான விஷயம். ஆனால், இதில் 10,000 ரூபாய் போட்டு 1 லட்ச ரூபாயும் சம்பாதிக்கலாம். 1 லட்ச ரூபாயை போட்டுவிட்டு ஒன்றுமே இல்லாத ஓட்டை ஆண்டியாவும் ஆகலாம். இதனை, Futures and Options Trading என்று கூறுவார்கள். இவற்றில், லாட் கணக்கில் தான் உங்களால் பங்குகளை வாங்க முடியும். ஒரு லாட் என்பது எத்தனை பங்கு என்பதை அந்த நிறுவனம் தான் முடிவு செய்யும். குறிப்பிட்ட, தேதிக்குள் அதனை விற்றுவிட வேண்டும் அதாவது, ஒவ்வொரு மாதத்தின் கடைசி வியாழக்கிழமைகளுக்குள் அதனை விற்று விட வேண்டும். இல்லையென்றால், சங்கு தான். இப்போது, வார கணக்கில் உள்ள Option Treading எல்லாம் வந்துவிட்டது. புதியவர்கள் இந்த Derivatives பக்கம் போகாமல் இருப்பது மிகவும் பாதுக்கப்பானது.
இல்லை, நான் போவேன் என்றால். போய், கன்னா பின்னா என அடிவாங்கி ரணகளமாக வாருங்கள். உஷாரா இருங்க.. 100 ரூபாய் போட்டால் 1,000 ரூபாய் என்று ஆசைப்பட்டு எலிப்பொறியில் சிக்கிய எலி போல ஆகிவிடாதீர்கள். இதிலும், லாபம் சம்பாதிக்கலாம். நிஜ மார்கெட்டில் உங்களுக்கு குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு வருட அனுபவம் தேவை. எடுத்தவுடன், நான் தலை கீழாக தான் குதிக்கப்போகிறேன் என்று குதித்தால், அதற்கு நிர்வாகம் பொறுப்பில்லை.
சரி, நான் இப்போது தான் மார்கெட்டிற்குள் நுழைகிறேன். எனக்கு எது சிறந்தது என்று கேட்டால், நாம் முதலில் பார்த்த, ஈக்விட்டி ட்ரேடிங் தான் தி பெஸ்ட்.
ஏனென்றால், நீங்கள் எந்த எண்ணிக்கையில் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம். அதே நேரத்தில், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இதனை நீங்கள் ஹோல்ட் செய்து வைத்துக்கொள்ளலாம்.
நல்ல நிறுவனங்களை ஆராய்ந்து அதில் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாறாக, எந்த விதத்திலும் ஒரு நிறுவனத்தை பற்றி ஆராயாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து பணத்தை போட்டால் எடுப்பது நீங்கள் தான். ஆனால், கவிழ்ப்பது மார்க்கெட்டாக தான் இருக்கும். அதனால், சூதானம் அவசியம்.
உங்கள் பணம், உங்கள் உழைப்பு என்பதை மறந்து விடாதீர்கள். மார்க்கெட்டுக்குள் நுழையும் போது, வெறும் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை மட்டுமே எடுத்துக்கொண்டு நுழையுங்கள். அதனை இரட்டிப்பாக்க பாருங்கள்.
உதாரணதிற்கு, நீங்கள் 5000 ரூபாயுடன் உள்ளே வருகிறீர்கள் என்றால், அதனை 10,000 ஆயிரமாக மாற்ற முயற்சி செய்யுங்கள். அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. முதலில், 5000 ரூபாயை 5100 ஆக்குங்கள். அதன் பிறகு, 5200, 5300 என படிப்படியாக செல்லுங்கள்.
இன்று 5000 ரூபாய் போட்டேன் அடுத்த வாரத்திற்குள் 10,000 ரூபாய் ஆக்கப்போறேன் என்றால், சந்தை உங்களை போண்டியாக்கி விட்டுவிடும். அதனால், நிதானம் அவசியம். அவசரம் கூடவே கூடாது நண்பர்களே..! அவரசரபட்டுவிட்டு, பேசாம இருந்திருக்கலாம்.. என்று புழம்புவதில் எந்த பயனும் இல்லை.
சரி, ட்ரேடிங் என்றால் என்ன.? அவற்றில் ஏதாவது வகைகள் இருக்கின்றதா..?
ஆம், இருக்கின்றது.
1.முதலீடு வணிகம்
2.நாள் வணிகம்
இந்த இரண்டு வகையான ட்ரேடிங்கில் நாம் ட்ரேட் செய்யலாம்.
1. முதலீடு வணிகம் ( Delivery Trading )
இந்த வகை ட்ரேடிங்கில் நீங்கள் பங்குகளை வாங்கி எப்போது வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம். ஆனால், எத்தனை பங்குகளை வாங்குகிறீர்களோ அதற்கு முழு பணத்தையும் செலுத்தி விடவேண்டும்.இதனை, Delivery Based Trading அல்லது CNC - Cash and Carry என்று கூறுவார்கள்.
2. நாள் வணிகம் ( Intraday Trading)
இந்த வகை ட்ரேடிங்கில் இன்று வாங்கிய பங்கை இன்றே விற்றுவிட வேண்டும். அதாவது, சந்தை தொடங்கும் நேரமான 09:15-ல் இருந்து முடியும் நேரமான 03:30 மணிக்குள் பங்கை வாங்கி விற்றுவிடவேண்டும். ஆனால், இந்த வகை ட்ரேடிங்கிற்கு நீங்கள் முழு பணத்தையும் செலுத்த அவசியமில்லை.
ஆம், உதாரணதிற்கு SBI வங்கியின் பங்கு இன்று 250 ரூபாயில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது, நீங்கள் SBI-யின் 100 பங்குககளை வாங்க முடிவு செய்து விட்டீர்கள். ஒரு வேளை, Delivery Based Trading என்றால் நீங்கள் 100 பங்குகளுக்கு 25,000 ரூபாய் செலுத்த வேண்டிவரும். ஆனால், Intraday Trading செய்யும் போது, வெறும் 3500 ரூபாயிலிருந்து 4000 ரூபாய்க்குள் செலுத்தினால் போதும். உங்களுக்கு 100 பங்குகள் கிடைத்து விடும். இதனை, Leverage என்று கூறுவார்கள்.
காரணம் என்னவென்றால், இன்று மாலைக்குள் நீங்கள் அந்த பங்கை விற்றாக வேண்டும். அப்படி தவறினால், 03:15 மணிக்கு உங்கள் ப்ரோக்கர் அவராகவே 100 பங்குகளையும் அப்போதைய விலைக்கு விற்றுவிடுவார்.
என்ன நண்பா, Delivery Based Trading-னு சொல்றீங்க... ! Intraday Trading-னு சொல்றீங்க..! காசு கம்மியா கட்டுனா போதும்-னு சொல்றீங்க... குழப்பமா இருக்கே என்று நினைக்கிறீர்களா..?
கவலையே வேண்டாம். அடுத்த பதிவில் இதனை தெளிவாகவும், விளக்கமாகவும் படிக்கலாம். அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.
அதற்கு முன்பு, பேப்பர் ட்ரேடிங் என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன். பங்கு சந்தையில் பணத்தை போடாமலே, ஒரு நிறுவனத்தை அலசி ஆராய்ந்து, அந்த பங்கை எந்த விலைக்கு வாங்கலாம் எந்த விலைக்கு விற்கலாம் என்பதை தெரிந்து கொண்டு அதனை பேப்பரில் வொர்க் அவுட் செய்து பார்ப்பது தான் பேப்பர் ட்ரேடிங்.
உதரணமாக, நீங்கள் TATA MOTORS நிறுவனத்தை ஆராய்ந்து வைத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில், நான் 245 ரூபாய்க்கு வாங்குவேன். 246 அல்லது 247 ரூபாய் வந்தால் விற்றுவிடுவேன் என்று பேப்பரி குறித்து வைத்துக்கொண்டு, அன்றைய மார்கெட்டில் நீங்கள் செய்த கணக்கு சரியாக வருகின்றதா. அல்லது, 245 ரூபாயில் இருந்து விலை இறங்கி 240-க்கு போய்விட்டதா என்று பார்க்க வேண்டும். இப்படி, குறைந்தபட்சம் 3 மாதங்கள் செய்யவேண்டும். அப்போது தான், மார்க்கெட்டுக்குள் வந்து பணத்தை இழக்காமல் இருக்க முடியும்.
எப்போது, எங்கே, என்ன விலைக்கு வாங்குவது...?எப்போது, எங்கே, என்ன விலைக்கு விற்பது..? போன்ற தகவல்களையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
உங்களது சந்தேகங்களை நம்முடைய முகநூல் பக்கங்களில் கேட்கலாம் நண்பர்களே. உங்களுக்கு பதிலிக்க நான் காத்திருக்கிறேன்.
தொடர்ந்து வரும், பதிவுகளை தவற விடமால் பார்க்க இந்த ( https://www.facebook.com/tamizhakamsmt/ ) முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள். அல்லது, (https://t.me/tamizhakamsmt) என்ற Telegram Channel-ல் இணைந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பதிவுகளின் லிங்குகளை நான் அவற்றில் உங்களுக்கு பகிர்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.
உங்களிடம் டெலிகிராம் ஆப் இல்லையென்றால் தயவு செய்து இன்ஸ்டால் செய்து நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதில், அனைத்து பதிவுகளின் லிங்குகள். அவ்வபோது செய்யப்படும் அப்டேட்டுகள் உங்களுக்கு தவறாமல் கிடைக்கும்.
நன்றி, வணக்கம்.