சிம்புவுடன் சரவணா, வைத்தீஸ்வரன், வீராசாமி என பலருடன் பல படங்களில்
நடித்தவர் நடிகை மேக்னா நாயுடு.
தனுஷ் நடித்த குட்டி படத்திலும், கார்த்தி
நடித்த சிறுத்தை படத்திலும் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியுள்ளார். ஹிந்தி, கன்னடம்,
தெலுங்கு என பல படங்களில் படு மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்துள்ளவர் பல டிவி நிகழ்ச்சிகளிலும்
கலந்துகொண்டுள்ளார்.
தற்போது அவர் தனக்கு டிசம்பர் 25, 2016 ல்
திருமணம் ரகசியமாக நடைபெற்றது என பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அவரின் அப்பா டென்னிஸ் பயிற்சியாளர். அவரின் மூலம் போர்ச்சுகீசிய நாட்டை
சேர்ந்த டென்னிஸ் வீரர் லூயிஸின் அறிமுகம் கிடைத்தது. பின் சமூகவலைதளத்தில்
நட்பு தொடர் பின் காதலானது.
தன்னை விட 10 வயது அதிகமுள்ள லூயிஸை
நான் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டேன். தேனிலவு தொடர்ந்துகொண்டே
இருக்கிறது. விரைவில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம்
என கூறியுள்ளார். இப்போது திருமணம் பற்றி எல்லோரும் விசயத்தை
தெரியப்படுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Tags
Cinema