நான் அஜித்துக்கு வில்லனா..? -எஸ்.ஜே.சூர்யா பதில்..!


H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளிவரவிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் இயக்குனர் H.வினோத் தான் இயக்குகிறார், போனி கபூர் தான் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தல-60ல் நடிகர் SJ சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்றும் இதுதொடர்பாக SJ சூர்யாவை போனிகபூர் நேரில் சந்தித்ததாகவும் வதந்தி ஒன்று பெரியளவில் கூறப்பட்டு வந்தது.

இதற்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்த SJ சூர்யா, இச்சந்திப்பு மான்ஸ்டர் படத்தின் வெற்றியை பாராட்டுவதற்காக மட்டுமே. எனது மான்ஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்கு போனி கபூர் ஆவலாக உள்ளார், நிச்சயம் அவருக்கு போட்டு காண்பிப்பேன் என்றார்.

Post a Comment

Previous Post Next Post