மேயாத மான் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் நடிகை அமலாபால்-ஐ வைத்து ஹீரோயின் சப்ஜெக்ட் படமான "ஆடை" என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம், நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தது தான். இந்த காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டது என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த கட்சிகளை சிறுசேரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தான் படமாக்கியுள்ளனர்.
படப்பிடிப்பு நடக்கும் போது அமலா பால் முழு நிர்வாணமாக நடிக்கவில்லை. தனக்கு பாதுக்கபிற்கு தேவையான ஆடைகளை அணிந்து கொண்டு தான் நடித்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், படப்பிடிப்பு நடக்கும் போது அந்த தொழிற்சாலையின் கட்டடதிற்கு யாரும் நிழைந்து விட முடியாதபடி தான் படக்குழு உஷாராக இருந்துள்ளது.


