ஆடை படத்தில் இத்தனை நாட்கள் ஆடையின்றி நடித்தாரா நடிகை அமலாபால்..! - ஷாக்கிங் அப்டேட்..!


நடிகை அமலா பால் ராட்சசன் படத்திற்குப் பிறகு தற்போது ‘ஆடை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமாரின் இயக்கத்தில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆடை படத்தின் டீசர் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ‘ஆடை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்த படத்தில் சவாலான, துணிச்சல் மிக்க காட்சிகளில் அமலா பால் நடித்துள்ளார்.