நூழிலையில் உயிர் தப்பிய பிரபல நடிகை..! - ஷாக்கிங் தகவல்


மலையாள சினிமாவில் இளம் நடிகை அர்ச்சனா கவி. இவர் சமீபத்தில் கொச்சியில் உள்ள விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார்.

அப்பொழுது கொச்சி மெட்ரோ ரயில் தூணில் இருந்து கான்கிரீட் ஸ்லாப்(கல்) ஒன்று அவர் கார் மீது விழுந்தது. இதனால் அவரது கார் மோசமாக சேதம் அடைந்துள்ளது.

ஆனால் காருக்கு ஏற்பட்டது போல் உள்ளே இருந்தவர்களுக்கு எந்த ஒரு சேதமும் இல்லை.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அர்ச்சனா பின் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.