ராட்சசன் படத்திற்கு பிறகு ஆடை, அதோ அந்த பறவை போல ஆகிய படங்களில்
நடித்து வருகிறார் அமலாபால். இதில் ஆடை படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார்.
திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதையின் நாயகியாக அமலாபால்
நடித்துள்ளார்.
அதேசமயம் ஆடை என்று இந்த படத்திற்கு பெயர்
வைத்திருந்தாலும் பல காட்சிகளில் ஆடைகளை குறைத்து அதிரடியான கவர்ச்சியையும்
வெளிப் படுத்தியுள்ளார் அமலாபால்.
இந்நிலையில், நேற்று
தணிக்கைக்குழுவினரின் பார்வைக்கு திரையிடப்பட்ட இந்த படத்திற்கு ஏ
சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. வி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த ஆடை
படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாக உள்ளது.


