வீடியோவை வெளியிட்டதற்கு அமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட "ஆடை" படத்தின் இயக்குனர்..!


இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ஆடை". இந்த படத்தில் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேயாதமான் என்ற படத்தை இயக்கிய ரத்னகுமாரின் இரண்டாவது படம் இது. 

இந்த படத்தில் நடிகை அமலாபால் ஆடையின்றி சில காட்சிகளில் நடித்துள்ளார். இந்த காட்சிகளை கிட்டத்தட்ட 21 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லரின் வடிவேலு வெர்ஷனை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர். 

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் ரத்னகுமார். அது குறித்து அவர் கூறுகையில், இப்போதெல்லாம் ஒவ்வொரு திரைப்படைப்புக்கும் வடிவேலு வெர்ஷன் எடிட் செய்து ரிலீஸ் செய்கிறார்கள். ஆடை படமும் விதிவிலக்கல்லஎன்றுகூறியுள்ளார். 

இதோ அந்த வீடியோ,