"ஆடை" படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன கூறியுள்ளார் பாருங்க..!


அமலாபால், சரித்திரன், விவேக் பிரசன்னா, ரம்யா ஆகியோர் ஒரு டிவி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள். மறைவிடத்தில் கேமரா வைத்து பொதுமக்களிடம் நடித்து ஏமாற்றும் பிராங்க் நிகழ்ச்சி செய்கிறார்கள். 

தொப்பி தொப்பி எனப்படும் அந்த பிராங்க் நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. அமலா பாலின் அம்மா ஸ்ரீ ரஞ்சனி அவரை ஒரு சராசரி பெண் போல இருக்க சொல்கிறார். 


ஆனால் அமலா பாலோ நவ நாகரீக பெண்ணாக மது, புகை, ஆண் நண்பர்கள், திமிரான நடவடிக்கைகள் என தன் மனம் போல இருக்கிறார். பந்தயம் கட்டி அதில் ஜெயிப்பது அமலா பாலின் குணம்.ரம்யாவிடம் தான் நிர்வாணமாக செய்தி வாசித்து காட்டுகிறேன் என்று பந்தயம் கட்டுகிறார். 


பிறந்தநாள் அன்று நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கிறார். பார்ட்டியில் நண்பர் ஒருவர் போதைப்பொருள்களை கலந்துவிட சுயநினைவு இல்லாமல் செல்கிறது. விழித்து பார்த்தால் ஆள் இல்லாத கட்டடத்தில் நிர்வாணமாக கிடக்கிறார். 

அமலா பாலை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார்? இதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? விளையாட்டுக்கு என நடத்தப்படும் பிராங்க் நிகழ்ச்சிகளால் என்ன மாதிரியான ஆபத்துகள் விளைகின்றன என்பதே படம். 

ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஆடை படத்தை பார்த்தேன். இன்றைய தலைமுறைக்கு தேவையான படம்.அமலா பாலின் நேர்த்தியான நடிப்பை கண்டு மிகவும் விரும்பினேன். 

ஒரு வேளை நீங்கள் இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் குடும்பத்துடன் சென்று பாருங்கள். ஆனால், திரையரங்கில் மட்டும் பாருங்கள் என்று கூறியுள்ளார்.