அந்த நேரத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் இதை செய்தால் என்ன..? - நடிகை கஸ்தூரி காட்டம்


சமூக வலைதளங்களில் நடிகர்கள் விஜய், அஜித்தின் ரசிகர்கள் எல்லை மீறி சண்டையிட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் #RIPactorVijay, #ஆகஸ்டு8_பாடைகட்டு என்பது மாதிரியான ஹேஸ்டாக்கை உருவாக்கி டிரெண்ட் செய்தனர். 

இப்படி இரு நடிகர்களின் ரசிகர்களும், சமூக வலைதளங்களில் உப்புப் பெறாத விஷயத்தை வைத்து மோதிக் கொண்டிருப்பதற்கு, பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். 


இந்நிலையில், சமூக பிரச்னைகளுக்கு தவறாமல் கருத்துச் சொல்லும் நடிகை கஸ்தூரி, இந்த விஷயத்துக்கும் தன்னுடைய கருத்தாக, டுவிட்டர் மூலம் பதிவிட்டிருக்கிறார். 


அந்தப் பதிவில் கஸ்தூரி கூறியிருப்பதாவது, தேவையில்லாத விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள், அந்த நேரத்தில் நல்ல காரியங்கள் செய்ய பயன்படுத்தினால், ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும். என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
Previous Post Next Post
--Advertisement--