‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட தனது நண்பர்களுடன் வெளியே செல்லும் அமலாபால், ஆடையின்றி ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். அந்த இடத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதுதான் படத்தின் கதை.
ஹீரோயினை மையப்படுத்தி நகரும் இக்கதையில் ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கடந்த 20-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஆடையின்றி நடித்த அமலாபாலின் துணிச்சலான நடிப்பையும் திரைத்துறை பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை அமலாபாலிடம் இந்த படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து அவரது காதலன் என்ன கூறினார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ஆடை பட கதை வந்ததும் முதலில் அவரிடம் தான் கூறினேன், படத்திற்காக 100 % என்னை தயார் செய்ததே அவர் தான் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.


