பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பான கடத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியில் ஒரே காதல் சர்ச்சைகள் அதிகம் பேசப்படுகிறது.
சீரியல் நடிகர் கவின், நடிகை சாக்ஷி, இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா ஆகிய மூவரின் திரிகோண காதல் கதை எப்போது முடியுமோ என்று ரசிகர்கள் ஒரு வித வெறுப்பில் உள்ளார்கள் என்று கூறலாம்.
இந்த நிகழ்ச்சியில் அடுத்து Wild Card எண்ட்ரீயாக நடிகைகள் கஸ்தூரி, சனம் ஷெட்டி, ஆல்யா மானசா போன்றோர் நுழைய இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் மலேசியா நாட்டை சேர்ந்த நடிகர், பாடகர், நடன ஆசிரியர் என எல்லா துறையிலும் கலக்கி வரும் ஜான்சன் பிலிக்சன் தான் பிக்பாஸில் நுழைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
அதற்கு ஆதாராமாக, அவர் இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து கிளம்பியுள்ளார், அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகவே இவர் தான் பிக்பாஸ் சீசன் 3-யின் 17-வது போட்டியாளர் என்கின்றனர்.
தமிழ் நாட்டில் பிரபலங்களே இல்லாதது போல மலேசியா, இலங்கை, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து போட்டியாளர்களை இறக்கி அவர்களை பிரபலமாக்கி வருகின்றது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.