தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியானவர்களில் முக்கியமானவர் மீனா. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் நாட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
ரஜினிக்கு எப்படி ஜப்பானில் ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு ரசிகர்கள் மீனாவுக்கும் இருக்கிறார்கள்.இ வர் நடித்த படங்களில் சேரனின் ‘பொற்காலம்‘, ‘பாரதி கண்ணம்மா’ மிக முக்கியமான படங்கள்.
பல ஆண்டுகள் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் 2009 ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். பெங்களுருவில் கணவருடன் வசித்து வந்தார் மீனா.
பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடுவராக தன் பயணத்தைத் தொடர்ந்தார். இப்போதும், தனக்கு ஏற்ற கதைகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறார் மீனா.
இந்நிலையில், 42 வயதாகும் நடிகை மீனா இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் லைக்குகளை லாரிகளில் அள்ளி வந்து கொட்டிக்கொண்டிருகிறார்கள்.




