ஒரே நாளில் ஒரே திரையரங்கில் இத்தனை காட்சிகளா..? - நேர்கொண்ட பார்வை படம் புதிய சாதனை..!


நடிகர் அஜித் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவரது படங்களுக்கு இருக்கும் ஒப்பனிங் அசாதாரணமானது.


இந்த வருடத்தின் தொடக்கத்தில் விஸ்வாசம் என்ற படம் மூலம் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட அவர் இப்போது நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் மூலமாகவும் சாதனை செய்து வருகிறார். 


படம் உலகம் முழுவதும் எந்த பிரச்னையுமின்றி வெற்றிகரமாக ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எல்லா இடத்திலும் அஜித்திற்கு பாராட்டு மழை தான், ஆனால் அவர் இதையெல்லாம் பெரிதாக கூட நினைக்காமல் தனது வேலையை கவனித்து வருவார். 

இந்நிலையில், இதுவரை எந்த நடிகர் படத்திற்கும் இல்லாத அளவில் முதல் நாளில் 106 ஷோக்கள் ஓடி சாதனை படைத்துள்ளது நேர்கொண்ட பார்வை, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு வளாகமான மாயாஜாலில் தான் இந்த சாதனை நடந்துள்ளது.
Previous Post Next Post
--Advertisement--