பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்நது பாடம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆனாலும் பிக்பாஸ் 2ல் பங்கேற்றதன் மூலம் இவர் பெரும் பிரபலமானார். இந்நிலையில் தற்போது ஜாம்பி படத்தில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் இந்த படம் உருவாகியிருக்கிறது.
இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாகியிருப்பதாக கூறினார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் வளர்க்கும் ஒருகுட்டி நாய்க்கு தனியாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கினை துவக்கியுள்ளார்.
அந்த நாயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.



