ஒரு கோடிப்பே...! - தயாரிப்பளார் தலையில் சூடு வைத்த ஐஸ் நடிகை..!


தொலைகாட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பிரபலமான அந்த ஐஸ் பொண்ணு சினிமாவில் நுழைந்து நடிகையானார். மேலும், இவர் நடிக்கும் படம்னா நம்பி போகலாம்பா என்ற இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளார். 

பல ஹிட் படங்களில் நடித்துள்ள இந்த ஐஸ் நடிகையை லக்கிற்காக படத்தில் கமிட் செய்யும் இயக்குனர்களும் இருகிறார்கள். ஒரு படத்தில் நடிக்க கதாபத்திரத்திற்கு ஏற்றபடி 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார் அம்மணி. 


ஆனால், சமீபத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு அலறவிட்டுள்ளார். காரணம், ஹீரோவிற்கு இது தான் முதல் படம். வெளிநாட்டில் படித்து வந்த பிரபல நடிகரின் வாரிசான இவர் இப்போது தான் நடிக்கvவந்துள்ளார்.


நடிகர் பெரிய இடத்து வாரிசு என்பதால் கேட்டதைக் கொடுப்பார்கள் என்று நினைத்து கேட்டாராம். ஆனாலும், கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க மனமில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக 75 லட்சம் ரூபாய் அவருக்கு சம்பளம் கொடுக்க முன் வந்துள்ளனர். 

காற்று உள்ளபோதே தூற்றிக் கொள் ரக நடிகையான இவர் வந்தவரை லாபம் என படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். மேலும், ஹீரோவின் குடும்பம் அம்மணிக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதும் ஒரு காரணமாம்.
Previous Post Next Post
--Advertisement--