ஹாரிஸ் ஜெயராஜின் மகளை பார்த்துள்ளீர்களா..? - இதோ க்யூட் புகைப்படம்


இசையமைப்பாளராக 2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தார். தொடர்ந்து பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து இவருக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினர். 

இவர் இருந்தாலே அந்த படத்தின் ஆல்பம் ஹிட் என்ற நிலையில் தான் இப்போது வரை உள்ளது. இப்படியான தகுதியை ஒரு சில இசையமைப்பாளர்கள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்நிலையில் இவர் தற்போது சூர்யா நடித்துள்ள காப்பான் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.


இப்படத்தில், முதன் முறையாக இவரின் மகள் "கேரன் நிக்கிட்டா"-வை ஒரு பாடலை பாட வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவருடைய மகளே அந்த பாடலை மேடையில் பாடினார். 


அப்போது தான் பலருக்கும் இது ஹாரிஸின் மகள் என தெரிந்தது. இதோ அவரது புகைப்படம், 

Previous Post Next Post