நடிகை மீரா சோப்ரா என்ற நிலா. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நிலா, தமிழ்ப்பட வாய்ப்புகள் இல்லாததால் டில்லியில் செட்டிலாகி விட்டார்.
இவர் நடிகை பிரியங்கா சோப்ரா-வின் உடன் பிறவா தங்கை ஆவார்.ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் தனது அக்கா பிரியங்கா சோப்ராவைப் போன்று, தானும் ஹாலிவுட் தொடர்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
இதன் பலனாக கனடா நாட்டு சின்னத்திரை தொடரிலும் நிலா நடித்து வருகிறார். 34 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீஸ் என்ற ஐந்து நட்சத்திர உணவு விடுதி ஒன்றில் உணவருந்த சென்ற இவர் தனக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து விட்டு சாப்பிட அமர்ந்தார். உணவும் வந்ததும், பசியில் இருந்த வர ஒரு வாய் சாப்பிட்டு விட்டார். அதனை தொடர்ந்து, தட்டில் உயிருடன் ஒரு புழு நெளிவதை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
சுகாதாரமான உணவுகள் கிடைக்கும் என்பதால் தான் இப்படியான உணவு விடுதிகளுக்கு வருகிறோம் இங்கேயும் இப்படி இருந்தால் என்ன அர்த்தம் என கத்தி கூச்சளிட்டுள்ளார். தொடர்ந்து, அவரிடம் ஹோட்டல் நிர்வாகம் சமாதானம் செய்ய முயன்றது. ஆனால், அவர் விடுவதாக இல்லை, அதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து அந்த ஹோட்டலின் மானத்தை வாங்கி விட்டார்.
இதோ அந்த வீடியோ,



