நடிகர் விஜய்யின் சினிமா வரலாற்றில் 2003-ம் ஆண்டு வெளியான "திருமலை" படதிற்கு என தனி இடம் உண்டு. விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் ரமணா.
இந்த படத்திற்கு பிறகு 2006-ம் ஆண்டு மீண்டும் விஜய்யை வைத்து "ஆதி" என்ற மற்றொரு படத்தை இயக்கினார். ஆனால் , படம் படுத்துவிட்டது. அது தான் ரமணாவின் கடைசி படமாக மாறிவிட்டது. இடையில், 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷின் "சுள்ளான்" படத்தை இயக்கினர்.
அவ்வளவுதான். தொடர்ந்து படங்கள் இயக்காமல் போனதற்கு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்நிலையில்,சென்னை சாந்தோம் பகுதியில் அவரது வீட்டருகில் இரண்டு டிராபிக் போலீசார் இவரை மறித்து அபராதம் விதித்துள்ளளனர்.
தவறாக வளைவில் அவர் காரை திருப்பியதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், நான் சரியாகத்தான் சென்றேன். விதி மீறல் இல்லை என கூறி அபராதம் கட்ட மறுத்துள்ளார் ரமணா.
அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது "ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய், எனக்கு ஒட்டிக்கும்... " என இவரை திட்டியுள்ளார் ஒரு டிராஃபிக் போலீஸ்.
மேலும், அங்கிருந்த இன்னொரு போலீஸ் "பாதியிலயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..?" என கூறினாராம்.
இதனால், மனமுடைந்த இயக்குனர் இது பற்றி தனதுமுகநூலில் பதிவிட்டுள்ள நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை இப்படியா மனிதாபிமானம் இல்லாமல் நடத்துவது என இந்த சம்பவம் பற்றி ரசிகர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Tags
Director Ramana