சிம்ரனா இது, நம்பவே முடியலையே..? - வைரலாகும் ஹாட் புகைப்படம்


தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். இவருக்கு தற்போதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால், 1990களில் ரசிகர்களின் கனவு தேவதை சிம்ரன் தான். 

அஜித், விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 


இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்த சிம்ரன் தற்போதும் ஒருசில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.நடிகை சிம்ரன், நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘சீமராஜா’ படத்தில் வில்லியாக நடித்திருந்தார். 


அனைத்து ஹீரோகளுடனும் நடித்து விட்ட சிம்ரன் ரஜினியுடன் மட்டும் நடிக்காமலேயே இருந்தார். சமீபத்தில் வெளியான, ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் நடித்து அந்த குறையை போக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சிம்ரனா இது, நம்பவே முடியலையே..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Previous Post Next Post