விளம்பர படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ள நடிகை தமன்னா..! - வைரலாகும் வீடியோ


தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. அவ்வப்போது பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வந்தார். பாலிவுட்டில் கடைசியாக பிரபுதேவாவுடன் இணைந்து கமோசி என்ற படத்தில் நடித்தார். 

இந்நிலையில் தற்போது பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நவாஜுதின் சித்திக் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா. நவாஜுதின் சித்திக்கின் சகோதரர் சமாஸ் சித்திக் இயக்கும் இந்தப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளார். 

இந்த படத்தில் நடிப்பது குறித்து தமன்னா, ‘இந்தப் படக்கதை நன்றாக இருக்கிறது. இதில் நடிக்க ஆவலாக காத்திருக்கிறேன். பாலிவுட் படம் ஒன்றில் மல்டிலேயர் கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை. இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் வித்தியாசமானது’ என்று பேசியுள்ளார். 


என்னதான், கோலிவுட், பாலிவுட் என்று முன்னேறி கொண்டே இருந்தாலும் இடைவேளையின்றி படப்பிடிப்பு பணிகள் இருந்தாலும் விளம்பர படங்கள் என்றால் பேரம் பேசாமல் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடிக்க கிளம்பி விடுகிறார் அம்மணி. 


ஏனென்றால், மக்களிடம் என்னை கொண்டு சேர்த்ததே இந்த விளம்பர படங்கள் தான். சினிமா என்னுடைய அடுத்த கட்டம் தான். ஆரம்ப காலத்தில் என்னை உருவாக்கிய விளம்பர படங்கள் மற்றும் என்னை வைத்து விளம்பர படங்கள் எடுக்க முன்வந்த நிறுவனங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று புல்லரிக்க வைக்கிறார் தமன்னா. 

இந்நிலையில், சமீபத்தில் பிரபல விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுதியுள்ள புதிய ரக காலணி ஒன்றின் விளம்பரத்தில் செம்ம ஹாட்டாக நடித்துள்ளார் தமன்னா. அந்த வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
Previous Post Next Post
--Advertisement--