சமீபத்தில் பாக்கியமான நடிகரின் வாரிசு நடிகர் தனது திருமண நாளை கொண்டாடினார். நாங்கள் கொண்டாடும் நான்காவது திருமண நாள் இது என கூறி புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அந்த வாரிசு நடிகருக்கு வாழத்துக்களை கூறி வந்தனர். ஆனால், இடையில் ஒரு இளம் நடிகர் என்ட்ரியாகி குட்டையை குழப்பினார். வாரிசு நடிகரின் நண்பரான இந்த நடிகர் சமீபத்தில் தான் தனது காதல் மனைவியை பிரிந்தார்.
இவருக்கு ஒரு ஆண் குழந்தை வேறு இருக்கிறது. விவாகரத்து செய்த அவரது மனைவி மிகவும் அமைதியானவர். சாதரணமாக பேசும் போது கூட சத்தமாக பேசமாட்டார். என்னை பத்திரமாக பார்த்துக்கொள்கிறார்.இன்னும் 10 வயது குழந்தை போல தான் இருக்கிறார் என்று யாரே சொல்ல வில்லை. விவாகரத்து செய்து விட்டு திரியும் அந்த நடிகரே தான் திருமணம் ஆகி ஒரு வருடம் கழித்து கூறினார்.
இந்நிலையில், வெளிநாட்டு அழகி ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக பாவப்பட்ட அந்த காதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுகின்றது.
இவருடைய வாழ்த்துகளை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கிடைத்த பொக்கிஷத்தை தொலைத்து விட்டு, இப்போது இன்னொருவரின் திருமண நாளிற்கு வாழ்த்து கூறி வருகிறீர்கள். இதெல்லாம் உருப்படுமா..? என்று கண்ட மேனிக்கு கழுவி ஊத்தி வருகிறார்கள்.