தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கூறிய குத்து ரம்யா-வின் திருமண வாழ்கையில் ஏற்பட்ட சோகம்..!


தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கூறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகையும், அரசியல்வாதியுமான "குத்து ரம்யா". 

கன்னட நடிகையான இவர் தமிழில், குத்து படத்தில் அறிமுகமானதை தொடர்ந்து இவர் "குத்து ரம்யா" என்றே அழைக்கப்படுகிறார். மேலும், சிங்கம் புலி, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் நடித்து பெயர்பெற்றவர். 


கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் ஷ்யாம் நடிப்பில் வெளியான "தூண்டில்" என்ற படத்தில் இதற்கு மேல் ஒரு நடிகை கவர்ச்சியாக நடிக்க முடியுமா..? என்று கேட்கும் அளவுக்கு கவர்ச்சி காட்டி இளசுகளை கிறங்கடித்தார். அதே போல் கன்னடத்தில் முன்னணி நாயகியாகவும் இருந்தவர். பின் காங்கிரஸ் கட்சியில் இணைத்து பணியாற்றி எம்.பியாகவும் ஆனார். 


தற்போது அரசியல் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் காட்டி வரும் ரம்யா தனது நீண்டநாள் காதலரான ராபில் என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டு துபாய் சென்று செட்டிலாகி விட்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர். 

ஆனால், இவரது அவரது அம்மா ரஞ்சிதா, இந்த திருமண செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லாததால் ரம்யா காதலரை பிரிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ரம்யா காதலனை திருமணம் செய்துகொண்டதாகவும் பிறகு இருவருகுள்ளும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதில் எது உண்மை என்று குத்து ரம்யா-வே வந்து கூறினால் உண்டு.

Advertisement