நடிகர் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே என பலர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுதும் வெளியாகியுள்ளது.
நாடு முழுதும் இருக்கும் அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடிவருகிறார்கள். நல்ல விமர்சனங்களை பெற்று சிறந்த வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. பெண்களுக்கான நீதி பற்றி படத்தில் பேசப்பட்டுள்ளது.
அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்ததுள்ளது. அஜித்தின் நடிப்பை பாராட்டும் பலர் அவருக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என சமூகவலைதள பிரமுகர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த பின்னர் " பெண்கள் மீதிருந்த பார்வை மாறிவிட்டதாகவும். இத்தனை நாட்களாக தவறாக இருந்துவிட்டோம். இனி, நேர்கொண்ட பார்வையுடன் இருப்போம் " என வாட்சப்பில் நண்பர் ஒருவர் கூறியதை அஜித் ரசிகர் ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், இதை விடவா ஒரு விருது கிடைக்க வேண்டும். தனி மனிதனின் மாற்றமே சமுதாயத்தின் மாற்றம். அதனை உறக்க சொன்ன நடிகர் அஜித்திற்கு நன்றி.
இத்தனை நாட்களாக அஜித் படங்களை பார்த்து விட்டு அவருக்கு வாழத்துக்களை தான் கூறி வந்தோம். இப்போது தான் முதன் முறையாக அவர்படத்தை பார்த்து விட்டு நன்றி கூறுகிறோம் என உணர்ச்சி பொங்க ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Tags
Nerkonda Paarvai