ஜன்னல் வச்ச ஜாக்கெட் போய்; இப்போ, கதவை வைக்க ஆரம்பிச்சுடிங்களா..? - VJ ரம்யாவின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!


பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான விஜே ரம்யா இன்று பிஸியான நடிகை. டாப்சியின் கேம் ஓவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். 

அதைத்தொடர்ந்து அமலா பாலின் ஆடை படத்தில், அவரது தோழியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ரம்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆடை படத்தின் வெற்றியை தொடர்ந்து ரம்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 


இதனால் அவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார். அவரது சமூக வலைதளப்பக்கங்களை பார்த்தால், அதனை நன்றாக உணரமுடியும்.இந்நிலையில் ரம்யா தனது பிறந்தநாளை நேற்று முன் தினம் கொண்டாடினார். 


நண்பர்கள் உறவினர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி பரிசு வழங்கினர்.இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் அவரது முழு முதுகும் பளீச்சென தெரியும் படியான உடை ஒன்றை அணிந்திருந்தார். 

இதனை பார்த்த ரசிகர்கள், எல்லோரும் ஜன்னல் வச்சி ஜாக்கெட் போட்ட காலம் போய் இப்போது கதவை வைக்க ஆரம்பித்து விட்டார்களா..? என கலாய்த்து வருகிறார்கள்.