நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ப்ரூனா அப்துல்லா. இவர் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன சில மாதங்களிலேயே கருவுற்ற இவருக்கு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தான் குழந்தை பெற்றெடுத்த கதையை எழுதி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ப்ரூனா.
அவர் கூறியுள்ளதாவது, நான் கர்பமான நாள் முதல் மருத்துவமனைக்கு செல்லாம் இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதில் தீவிரமாக இருந்தேன். அதே போல இயற்கையான முறையிலேயே பிரசவம் நடந்தது.
வெதுவெதுப்பான தண்ணீர் நிரம்பிய குளத்தில் என் கணவர் மடியில் அமர்ந்து கொண்டு குழந்தையை பெற்றேடுத்தேன். அப்போது, என்னை பெற்ற எனது தாயும் உடனிருந்தார். வீட்டில் உள்ளவர்கள் சிறிது பயப்பட்டதால் ஒருபாதுகாப்பிற்காக மருத்துவர் குழுவும் எங்கள் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர்.
இருந்தாலும் எந்த விதமான மருத்துவ உதவியும் இன்றி இயற்கையான முறையில் குழந்தையை பெற்றேடுத்தேன். குழந்தை பிறக்கும் போது வலியால் துடித்தேன். ஆனால், இப்போது எனக்கு எந்த பிரச்சனையையும் தாங்கி கொள்ளும் வலிமை உள்ளது.
குழந்தை பிறக்கும் வரை தான் வலியை அனுபவித்தேன். குழந்தை பிறந்த அடுத்த நொடியே வலிகள் பறந்துபோனது. என்னையே நான் புதுமையாக உணர்ந்தேன். மகிழ்சியாக இருந்தேன். என்று உருக்கமாக கூறியுள்ளார்.