இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை படத்தில் தயாரிப்பு நிறுவனம் AGS எண்டர்டெயின்மென்ட் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் பிரம்மாண்டமாக நடத்தியது.
இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சி நேற்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது.
இந்நிலையில் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் டேனியல் பாலாஜி, விஜய் குறித்து தான் இசைவெளியீட்டு விழாவில் பேசியதில் ஒரு பகுதியை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெட்டி விட்டதாக ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் என்ன பேசினீர்கள். அதை பதிவிடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து நான் என்ன பேசினேன் என்பதை மீண்டும் பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‘என் உரையில் நான் சொன்னது, விஜய் அண்ணா சக நடிகருக்கு ஒரு பாதுகாவலர், எனக்கு ஒரு நல்ல நண்பர், பெற்றோருக்கு ஒரு நல்ல மகன், அதேபோல், அவரது இதயத்தில் வாழும் ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல தலைவர், விரைவில் வருவார்’ இவ்வாறு பேசியதாக பதிவிட்டிருக்கிறார்.


