தொலைக்காட்சி நடன நிகழ்சிகள் மூலம் பொது வெளிக்கு அறிமுகமான அந்த நடிகை முதன் முறையாக விஜயமான நடிகர் படத்தில் ஹீரோயினாக களமிறங்கினார்.
ஆனால், ஹீரோயினாக அவரை ஏற்றுக்கொள்ள தயங்கிய ரசிகர்கள் பல விருதுகளை குவித்த ஒரு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததற்கு பிறகு அவரை கொண்டாடினர்.
அந்த படம் அம்மணிக்கு திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு கோடிகளை அள்ளி வருகிறார். அம்மணியின் நிஜ வயது 37 என்கிறார்கள். ஆனால், தனக்கு இப்போது 29 வயது தான் ஆகின்றது என்று தன்னுடைய 8 வயதை மூடி மறைத்து வருகிறார் அம்மணி.
இவர் முதலில் அறிமுகமானது விஜயமான நடிகர் படத்தில் அல்ல, 2008-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி 2010-ம் ஆண்டு வெளியான புதுமுகங்களை கொண்டு உருவாகி வெளியான ஒரு படம் தான். ஆனால், அந்த படம் வந்த தடமும் போன இடமும் தெரியாமல் போனது.
பிறகு அது ஆட, இது ஆட என்ற நிகழ்ச்சி தான் அம்மணிக்கு அறிமுகத்தை கொடுத்தது. தனது உண்மையான வயதை சாமர்த்தியமாக மறைத்து தன்னை விட வயது குறைவான நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்து வரும் நடிகை கெட்டிக்காரி தான் என்று கிசுகிசுகிரார்கள் சினிமா ரசிகர்கள்.
Tags
Gossip