நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால், இதுவரை சென்சார் ரிப்போர்ட் வரவில்லை. இன்று சென்சார் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த அப்டேட்டும் இல்லை.
இது ஒருபக்கம் இருக்க,பிகில் படத்தை வெளியிடுவதாக கூறிய பல திரையரங்குகள் பல்டி அடித்து விட்டன. தற்போதைய நிலவரப்படி, தமிழத்தில் வெறும் 330 அரங்குகளை மட்டுமே பிகில் திரைப்படம் பிடித்துள்ளது. அதே சமயம், கைதி 227 அரங்குகளிலும் , சங்கத்தமிழன் திரைப்படம் 157 அரங்குகளையும் புக் செய்துள்ளது.
பிகில் படத்தின் பட்ஜெட் 180 கோடி ரூபாய் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அப்படியென்றால், தமிழகத்தில் குறைந்த பட்சம் 650 அரங்குகளை பிகில் ஆக்கிரமிக்க வேண்டும். ஆனால், கார்த்தி, விஜய்சேதுபதி என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டிக்கு வருவதால் 600 அரங்குகள் என்பது சாத்தியமா..? என்று தெரியவில்லை.
இதனால் பிகில் படக்குழு புலம்பி வருகின்றது. மேலும், படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது வரை 330 அரங்குகள் மட்டுமே கிடைத்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.
மேலும், பிரபல அரசியல் கட்சியின் அழுத்தமும் பிகில் தியேட்டர் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என்று கிசுகிசுகிரார்கள் விவரம் அறிந்தவர்கள்.