தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது தமிழை விட தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்த ரானா நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ‘விரத பர்வதம் 1992’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி வழக்கத்திற்கு மாறாக கவர்ச்சி வேடம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஏராளமான நடிகைகள் செய்ய முன் வரவில்லை.ஆனால் சாய்பல்லவி தன் நடிப்பின் மேல் நம்பிக்கை வைத்து இவர் ஒப்புக்கொண்டார்.
இவரின் நடிப்பிற்கே மார்க்கெட்டில் தனி டிமேன்ட் இருக்கின்றது. இவர் டுயட் பாத்திரங்களை தவிர்த்து மிக கடினமான பாத்திரங்களையும் தேர்ந்தேடுத்து நடிக்கிறார். சாய்பல்லவி தமிழ் ,மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
தமிழ், மலையாளத்தில் கவர்ச்சியை தவிர்த்த சாய் பல்லவி தெலுங்கில் மட்டும் கவர்ச்சிக்கு ஓகே சொல்லியுள்ளார். மேலும், படத்தில் படு கவர்ச்சியான பிகினி உடையில் தோன்றக்கூடிய சில காட்சிகளில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் பரவி ரசிகர்களை ஷாக் ஆக்கியது.
ஆனால், பிகினி உடையில் நடிக்க சாய்பல்லவியை படக்குழு அணுகவில்லை, அப்படியான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை எனவும் நம்பதகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
Tags
Sai Pallavi