மது போதையில் தூங்கிய அண்ணன்.. தங்கை செய்த காது கூசும் அசிங்கம்.. விசாரணையில் மிரண்டுபோன போலீஸ்!

நாகரிகல்லு (பல்நாடு மாவட்டம்): ஆந்திரப் பிரதேசம் பல்நாடு மாவட்டம் நாகரிகல்லு யானாடி காலனியைச் சேர்ந்த அரசு ஆசிரியர் பௌலிராஜுவின் மகள், சொத்து மற்றும் தந்தையின் ஓய்வூதியப் பணத்துக்காக தனது அண்ணன் மற்றும் தம்பியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பௌலிராஜு (அரசு பழங்குடியினர் நலப்பள்ளி ஆசிரியர்) சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் கோபிகிருஷ்ணா பந்தளமோடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார்.

இரண்டாவது மகன் துர்கா ராமகிருஷ்ணா மற்றும் மகள் கிருஷ்ணவேணி ஆகியோருக்கும் திருமணமாகியிருந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தனர். கோபிகிருஷ்ணாவின் மனைவியும் அவரைப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மூவரும் தந்தையுடன் வசித்து வந்தனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நலக் குறைவால் பௌலிராஜு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சொத்துப் பிரச்னை மற்றும் தந்தையின் அரசு ஓய்வூதியப் பணத்தைப் பங்கு போடுவதில் மூவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது.

தந்தையைத் தானே பார்த்துக் கொண்டதாகக் கூறி, முழு பணமும் தனக்கே வேண்டும் என கிருஷ்ணவேணி வாதாடியதாகக் கூறப்படுகிறது. இதில் சகோதரர்கள் சம்மதிக்காததால், அவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கிருஷ்ணவேணிக்கு அருகில் வசித்த ஒருவருடன் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்ததாகவும், அவருடன் சேர்ந்தே இந்தக் கொலைகளைத் திட்டமிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த நவம்பர் 26 அன்று தம்பி துர்கா ராமகிருஷ்ணாவை அருகிலுள்ள ஆற்றுக் கால்வாயில் தள்ளிக் கொன்றதாகவும், டிசம்பர் 10 அன்று அண்ணன் கோபிகிருஷ்ணாவை அதிக அளவு மது அருந்த வைத்து, போதையில் மயங்கிய நிலையில் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் கிருஷ்ணவேணி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோபிகிருஷ்ணா பணிக்கு வராததால் சந்தேகம் அடைந்த பந்தளமோடு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது இந்த திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. இரு உடல்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கிருஷ்ணவேணியை கைது செய்த போலீசார், அவரது காதலனையும் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் யானாடி காலனி மற்றும் பல்நாடு மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துப் பிரச்னையால் குடும்ப உறுப்பினர்களே கொடூரமான கொலையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English : In Andhra Pradesh’s Palnadu district, a woman from Yanadi colony is under police probe after her two brothers went missing. The siblings had disagreements over family property and their late father’s government retirement benefits. The elder brother, a police constable, did not report for duty, leading to an investigation.