உலகளவில் பிரபலமான பத்திரிக்கையான ’VOGUE’-ன் இந்தியா பதிப்பில் தன்னுடைய 12வது வருடத்தைக் கொண்டாடுகிறது. அதற்கான சிறப்பு இதழாக தென்னிந்திய சினிமாவை போற்றும் இதழாக வெளிவந்துள்ளது.
VOGUE இந்திய பத்திரிக்கை எப்போதுமே பாலிவுட் பிரபலங்களையே குறிவைக்கும். எப்போதாவதுதான் தென்னிந்திய சினிமாவை எட்டிப்பார்க்கும்.
அதேபோல் VOGUE-கின் அட்டைப்படத்தில் இடம் பெறுவது என்பதும் ஒவ்வொரு நடிகர்கள், மற்றும் மாடலிங் துறையில் இருப்போரின் பெருங்கனவு.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவைப் போற்றும் தருணத்தில் வளரும் நட்சத்திரங்களை அடையாளம் கண்டு அவர்களை அட்டைப் படத்தில் வைத்து அழகு பார்த்துள்ளது.
அதாவது மலையாளத்தில் துல்கர் சல்மான், தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் தமிழில் நடிகை நயன்தாராவை அட்டைப் படத்தில் வைத்துள்ளது. இவர்கள் மூவர்தான் தென்னியந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திரங்களாக அறிமுகப்படுத்தியுள்ளது VOGUE பத்திரிக்கை.
இதற்காக,செம்ம சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.
Tags
Nayanthara