தளபதி 65 இயக்குனர் இவரா..? - செம்ம சீன் இருக்குது..! - மாஸ் அப்டேட்


கலவையான விமர்சனங்களை பெற்று "பிகில்" படம் ஹிட்டாகியுள்ள நிலையில் தற்போது விஜய் தன் அடுத்த படமான தளபதி64 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது டெல்லியில் நடந்துவரும் ஷூட்டிங்கில் விஜய் கல்லூரி மாணவர் போன்ற கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் கசிந்தன. 

இந்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி உள்ள நிலையில், அவரிடம் தடம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் மகிழ் திருமேணி ஒரு கதையை கூறி ஒப்புதல் வாங்கிவிட்டார் என கூறுகிறார்கள்.


எனவே, தளபதி 65 படத்தில் விஜய்-மகிழ்திருமேணி கூட்டணியை எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். இது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.தளபதி 64 படத்திற்கு பிறகு தான்அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட் வரும் என்று கூறுகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--