நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியினரின் கடைசி மகள் ஸ்ரீதேவி. இவர் குழந்தை நட்சத்திரமாக ‘ரிக்ஷாமாமா’, ‘அம்மா வந்தாச்சு’, ‘டேவிட் அங்கிள்’, ‘தெய்வ குழந்தை‘, ‘சுகமான சுமைகள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஹீரோயினியாக அறிமுகமான படம் ‘காதல் வைரஸ்’. அதையடுத்து நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக ‘தித்திக்குதே’ படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘தேவதையை கண்டேன்’ திரைப்படம் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவிக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு ரூபிகா என்ற பெண் குழந்தை 2016ல் பிறந்தது.
சமீபத்தில்தான் ரூபிகாவின் இரண்டாவது பிறந்தநாளை நடிகை ஸ்ரீதேவி கொண்டாடி மகிழ்ந்தார். தற்போது நடிகை ஸ்ரீதேவி உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார்.
சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், சினிமாவிலும் மீண்டும் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள்.











