நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.விஜய்யை சுற்றி எப்படி ஏதாவது ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டே இருக்குமோ, அதே போல இவரை சுற்றியும் ஏதாவது சர்ச்சை சுற்றிக்கொண்டிருக்கும் அப்படி இல்லையென்றால் ஏதாவது ஒரு சர்ச்சையை சுற்றிக்கொள்வார்.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள "கேப்மாரி"படத்தின் டீசர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு "A" சான்று கொடுத்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் இந்த படத்தை பற்றி உங்களிடம் ஏதாவது கேட்டாரா..? கேப்மாரி பற்றி என்ன கூறினார்..? என்று எஸ்.ஏ.சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், இது போன்ற விஷயத்தில் விஜய் தலையிட மாட்டார். வேலை வேறு, பர்சனல் வேறு என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். மேலும், படம் ரிலீஸ் ஆகும் முன் விஜய்க்கு படத்தை போட்டு காட்டுவேன் என்று கூறியுள்ளார் எஸ்.ஏ.சி.



