நடிகை ரக்ஷிதா சரவணன் மீனாட்சி தொடரில் கடந்த ஆறு வருடங்களாக கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த தொடரில் இவர் நடித்த பிறகு இவர் மிகவும் பிரபலமானார்.
இவருக்கு என்று பல ரசிகர்களும் உருவாகினர். சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் ரக்ஷிதா. இந்நிலையில் கடந்த இரண்டு சீசன்களாக மீனாட்சியாக நடித்தார்.
இந்நிலையில் இந்த சரவணன் மீனாட்சி தொடர் நிறைவடைந்தது. இதனால் அண்மையில் இணையதளத்தில் நடிகை ரக்ஷிதா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையதளத்தில் வைரலாகி லைக்குகள் குவித்து வருகின்றன.










