அவசரப்பட்டு இப்படி பண்ணிடீங்களே..? - இனிமே எப்படி..? - ஒதுக்கும் இயக்குனர்கள் - சோகத்தில் இளம் நடிகை


வெளிநாட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதியானவர் அந்த நடிகை. ஹாலிவுட் நடிகை போல இருந்த காரணத்தினால் பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்து வந்தன. 

தமிழ் மட்டுமின்றி,தெலுங்கு, ஹிந்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி  போட்டு நடித்து வந்தார். கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் காட்டும் மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் சரி.. களத்தில் இறங்கி கலக்குவார் அம்மணி. 

மற்ற நடிகைகள் எல்லாம் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு கிடுகிடுவென வளர்ந்த அந்த நடிகையின் மீது யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. இன்னும், 30 வயது கூட ஆகாத நிலையில் ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்டார். இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது கூடுதல் தகவல். 

படங்களில் நடித்து கலைப்பாகி விட்டது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் என்று தனது சொந்த ஊருக்கு சென்றவர் காதலனுடன் கொஞ்சம் நெருக்கமாக இருந்த காரணத்தினால் கற்பமாகி விட்டார். ஆனால், அதனை மறைக்காமல் வெளிப்படையாக அறிவித்து விரைவில் நானும் என் காதலனும் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார் அம்மணி. 

அந்த விஷயத்தில் அவரை பாராட்ட வேண்டும். இப்போது, குழந்தை பிறந்து விட்ட நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க சில முன்னணி இயக்குனர்களை அழைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம் அம்மணி. இதனை கேட்ட இயக்குனர்கள், திருமணம் ஆகி விட்டாலே பட வாய்ப்பு குறைந்து விடும்.. இதில் இவங்க குழந்தையே பெத்துகிட்டாங்க..? இனிமே எப்படி வாய்ப்பு கிடைக்கும் என நடிகையை ஒதுக்கி வருகிறார்களாம். 

அம்மணிக்கு குழந்தை வரம் கொடுத்த அவரது காதலன் ஒன்றும் பெரிய தொழிலதிபரோ அல்லது பணக்காரரோ இல்லையாம். அவரும் ஒரு மாடல் தானாம். அமெரிக்காவில் சில வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறாராம். 

குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கும் நடிகை வாய்ப்பு கிடைக்குமா..? என்று சோகத்தில் உள்ளாராம்.

--- Advertisement ---