மூக்கில் வலியுடன் 10 வருடமாக வேதனை அனுபவித்த இளம்பெண் - ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்து போன மருத்துவர்கள்..!


கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளாக மூக்கு வலியால் மிகவும் துன்பப்பட்டு வந்துள்ளார். 

வலி வருவதும், பின் சரியாகி விடுவதுமாக மாறி மாறி இருந்து வந்துள்ளது. தற்போது, 22 வயது ஆகும் அவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடை பெறவுள்ள நிலையில் மூக்கில் வலி தீவிரமடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்ற அவரது மூக்கை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்து தான் போனார்கள். ஆம், அவரது மூக்கில் சட்டை பட்டன் ஒன்று இருந்துள்ளது. ஒரு பக்க மூக்கு துவாரத்தில் அடைபட்டிருந்த அந்த பட்டனை சுற்றி மெல்ல மெல்ல சதை வளர்ந்து முழுவதுமாக மூடிக்கொண்டிருகின்றது.

மூக்கின் இன்னொரு துவாரம் வழியாக மட்டுமே மூச்சு விட்டு வந்த அவருக்கு சில நாட்களுக்கு முன்பு மூக்கில்கடுமையான வலி ஏற்படவே உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


மூக்கில் பட்டன் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். இப்போது அந்தபெண் நலமாக இருக்கிறார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது.