மகா கேவலம் , மகா மட்டம் - "நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" - சொன்னது யார்..?


பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பல படங்கள் இயக்கியவர், அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கேப்மாரி படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில், இது பற்றி திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கோபமான கருத்து தெரிவித்துள்ளார். 

படத்தோட பெயர் "கேப்மாரி" அந்த பெயருக்கு தகுந்த மாதிரிதான் படம் இருக்கு. பாலியல் குற்றங்கள் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் எப்படி மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என நம்பி இந்த மாதிரி மகா கேவலமான, மகா மட்டமான படத்தை எடுக்கிறார்கள் என தெரியவில்லை. 

இந்த படத்தை எடுத்தற்காக எஸ்ஏசியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாலும் தப்பில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என அவர் கூறியுள்ளார்.