சரவணா ஸ்டோர்ஸ் கடை உரிமையாளர் அருள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இந்நிலையில், படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
'சரவணா ஸ்டோர்ஸ்' கடையின் உரிமையாளர் அருள் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை விக்ரம் மற்றும் அஜித்தை வைத்து 'உல்லாசம்', விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டையர்கள் ஜே.டி-ஜெர்ரி இயக்குகிறார்கள்.
இந்தப்படத்தில் அருள்க்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற "கீத்திகா திவாரி" என்பவர் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் பாடல் காட்சியில் எடுக்கபட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஷங்கர் படத்தின் செட்டிற்கே சவால் விடும் அளவுக்கு பிரம்மண்டமான செட்டில் பாருங்கப்பா என் தலைவன் ரொமான்ஸை என்று கொண்டாடி வருகிறார்கள் நெட்டிசன்கள்.





