இன்று காலை முதல் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ விவகாரம் தான் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருகின்றது. தன் கணவர் ஈஸ்வர் தன்னை கொடுமை படுத்துவதாக காவல் நிலையில் புகார் கொடுத்துள்ளார் ஜெயஸ்ரீ.
அவர் கொடுத்துள்ள புகாரின் படி, தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாக கூறியுள்ளார். மேலும், அவர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார்.
தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தையும் ஈஸ்வர் அபகரித்துக் கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், குழந்தையுடன் தவித்து வருவதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
அவருக்கு குடிப்பழக்கம் இருப்பது திருமணதிற்கு முன்பே எனக்கு தெரியும். ஆனால், சூதாட்டத்தில் பணத்தை வாரி இறைக்கும் இவரது பழக்கம் எனக்கு தெரியாது. மேலும், நானும் என் குழந்தையும் வீட்டில் இருக்கும் போதே வேறு நடிகையுடன் வீடியோ காலில் கொஞ்சி குலாவுகிறார். என்னுடைய சொத்துகளை அடமானம் வைத்துவிட்டார். அவை இப்போது மூழ்கும் நிலையில் உள்ளது என வேதனையுடன் கூறியுள்ளார்.
நடிகர் ஈஸ்வர்நடிக்கும் அதே சீரியலில் நடித்து வரும் மஹாலக்ஷ்மியுடன்நெருக்கமாக இருப்பதாக கூறுகிறார்கள். பிரபல சீரியல் நடிகர்கள் விவகாரம் இப்படி வீதிக்கு வந்ததை கண்ட சின்னத்திரை வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


