சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடாவுள்ள விஜய், அஜித் பட ஹீரோயின்..! - ரசிகர்கள் திகைப்பு..!


தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். இந்நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் தமிழ் நடிகைகள் நடித்தனர். 

பிறகு அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணா அருள், தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் சேர்ந்து விளம்பரப் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

அவரின் நடிப்பை பலரும் கேலி, கிண்டல் செய்தாலும் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் அருள் தொடர்ந்து தனது கடை விளம்பரத்தில் நடித்து வருகிறார். இப்படி விளம்பரத்தில் மட்டும் நடித்து வந்த அருள், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். 

சரவணா அருள் தயாரித்து, நடிக்கும் இப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சரவணனுக்கு ஜோடியாக, மாடல் நாயகி கீத்திகா திவாரி நடிக்கவுள்ளார். 

350 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு மட்டுமே 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள். மேலும், இந்த படத்தில் நடிகை தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட சம்மதித்துள்ளாராம். இதற்காக, இவருக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதனை அறிந்த ரசிகர்கள் திகைத்து போயுள்ளனர்.