'வி.ஐ.பி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சிம்ரன். இந்தப் படம் 1997ல் வெளியான அதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பும், நடனமும் எல்லோருக்கும் பிடிக்கும். அந்த சமயத்தில் இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், உருதி, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அஜீத், விஜய், பிரசாந்த், விஜயகாந்த், முரளி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
இடையில் அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தார். தற்போது மறுபடியும் ரீஎண்ட்ரி என்பது போல் ரஜினி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார் நடிகை சிம்ரன்.
இவரும் சக நடிகைகள் போல தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருக்கும் தெருக்களில் நின்றபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மிகவும் குட்டியான சார்ட்ஸ் அணிந்துள்ள சிம்ரனை பார்த்த ரசிகர்கள். மேடம், பேண்ட் போடாம போயிடீங்க.? என்று கலாய்த்து வருகிறார்கள்.

