ஆத்தாடி.! ப்ளூ சட்டை மாறன் இயக்கவுள்ள படத்தின் தலைப்பு - ஆரம்பமே சர்ச்சையா..?


லட்சக்கணக்கான சினிமா ரசிகர்களை கவரும் யூ-ட்யூப் விமர்சகர்களுக்கு மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமானவர் 'ப்ளூசட்டை' மாறன். 

பல படங்களை விமர்சனம் செய்து உள் வாங்கிக்கட்டிக்கொண்ட ப்ளூ சட்டை மாறன் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். 

இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் தயாரித்து வருகிறார். இந்நிலையில் மாறன் இயக்கும் படத்திற்கு ஆண்ட்டி இண்டியன் என்று தலைப்பு வைத்துள்ளதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். 

இதை கேட்ட பலருக்கும் ஆரம்பமே இப்படி சர்ச்சையான அப்டேட்-ஆக வந்துள்ளதே என்று கூறி வருகின்றனர்.