மகாலக்ஷ்மியின் கணவருடன் ஜெயஸ்ரீக்கு தொடர்பு - பிளேட்டை திருப்பி போட்ட ஈஸ்வர் - பகீர் குற்றச்சாட்டு


பிரபல தொலைக்காட்சி தொடரான வம்சம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் ஜெயஸ்ரீ. அதேபோல் ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். 

அதைத் தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். 

இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைப்படுத்துவதாக கூறினார். 

மேலும், அவர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் மகாலட்சுமியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார் ஜெயஸ்ரீ. இதையடுத்து ஈஸ்வரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

தற்போது, ஜாமீனில் வெளியே வந்திருக்கும் நடிகர் ஈஸ்வர் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நடிகை ஜெயஸ்ரீ அவரது முதல் கணவரிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டியுள்ளார்.

நான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும் , குழந்தையிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் அவர் கூறுவது முற்றிலும் பொய். குழந்தையின் எதிர்காலம் குறித்து ஜெயஸ்ரீக்கு கவலை இல்லை.

மேலும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பு இருப்பதாக என்னுடைய மனைவி ஜெயஸ்ரீ அவதூறு பரப்புகிறார். வேண்டுமானால் என்னுடைய மனைவிக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் தொடர்பிருக்கலாம்.

நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில்-ன் தூண்டுதலின் பேரில் தான் இந்த பிரச்னை நடக்கிறது என்று பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.