பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ. இவர் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
34 வயதாகும் இவருக்கு, கடந்த டிசம்பர் 30-ம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இதுபற்றி நடிகை இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
அவர் " இப்போது என்னுடைய அதிகாரபூர்வமான பெயர் Mrs.ஸ்ரித்திகா சனீஷ்" என அந்த பதிவில் கூறியுள்ளார்.
தற்போது, வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க :
இதையும் படிங்க :

